02
Mar 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
சட்டமன்றம் ஸ்டாலின் ஜால்ரா மன்றமாக மாறிவிட்டது: ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
BY NEWS TODAY
21 Feb 2026
0
பகிர்

திமுகவின் கூட்டணி கட்சிகளால் கடந்த 5 ஆண்டுகளில் சட்டமன்றம் ஸ்டாலின் ஜால்ரா மன்றமாக மாறிவிட்டது என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார். 

தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் கூறுகையில், " நேற்றோடு 16வது சட்டமன்றம் 5 ஆண்டுகளை வேதனையுடன் நிறைவு செய்துள்ளது. தற்போது தமிழக மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர் சர்வாதிகார, குடும்ப ஆட்சிக்கு தற்காலிகமாக மக்களுக்கு விடுதலை கிடைத்துள்ளது. அடுத்த 17 வது சட்டமன்ற தொடரில் எடப்பாடியாரின் தலைமையில் ஆட்சி மலர வேண்டும் என மக்கள் உறுதியுடன் உள்ளனர்.

இந்த ஐந்தாண்டுகளில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் திமுகவின் சட்ட ஒழுங்கை பற்றி பலமுறை ஆதாரத்துடன் எடுத்து வைத்தார். ஆனால் முதலமைச்சர் அதற்கு தீர்வு காணவில்லை அதேபோல தமிழகத்தில் விலைவாசி உயர்வு, பாலியல் சம்பவங்கள், சொத்து வரி உயர்வு ,மின் கட்டணம் உயர்வு ஆகியவற்றை மக்கள் விரோத போக்கை படம் பிடித்து எடப்பாடியார் காட்டினார். எடப்பாடியார் சட்டமன்றத்தில் பேசினால் நேரலை துண்டிக்கப்படுகிறது ஆனால் திமுகவினர் பேசினால் நேரடி ஒளிபரப்பப்படுகிறது. பொதுவாக ஆளுங்கட்சியும், எதிர்கட்சியும் இருபக்க நாணயம் போல இருக்க வேண்டும் அப்போதுதான் தமிழகம் உயர்வு பெரும் என்பதை கூட முதலமைச்சர் அறியவில்லை

இன்றைக்கு அரசின் குறைபாடுகளை, இயலாமையை, நிர்வாக குளறுபடிகளை எடுத்து வைக்கும் விதமாக இன்றைக்கு நீதியரசர்கள் திமுகவின் மூத்த அமைச்சர் மீது ஊழல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர் ஆனால் முதலமைச்சர் எதையும் நடக்காது போல இருந்து வருகிறார். 2021 சட்டமன்றத் தேர்தலில் 525 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியது போல ஒரு தோற்றத்தை ஸ்டாலின் ஏற்படுத்துகிறார் இதை எல்லாம் விளம்பர வெளிச்சத்தில் செய்து மறைத்து வருகிறார். 

மதுரை கோரிப்பாளையம் பாலம் புரட்சி தலைவி அம்மா 110 விதியின் கீழ் அறிவித்தார். எடப்பாடியார் இதற்காக முன்னெடுத்தார் என்ற வரலாறை ஸ்டாலின் மறைக்க பார்க்கிறார். இதே நெல்பேட்டை முதல் விமானம் நிலையம் வரை பாலம் அமைக்கப்படும் என்று கூறினார். இதுவரை அடிக்கல் கூட நாட்டப்படவில்லை. அதே போல திருமங்கலம் ரயில்வே மேம்பால திட்டம் அம்மாவின் ஆட்சிக்காலத்தில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்டு,அரசாணை வெளியிடப்பட்டு, நில எடுப்பு பணிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதற்கான வரலாற்றை அழிக்க பார்க்கிறார்.இந்த திட்டங்கள் எல்லாம் அவர்கள் கொண்டு வந்த தோற்றத்தை போல உருவாக்கினார்கள் வாக்காளர்கள் எல்லாம் அறிந்தவர்கள். அவர்களின் காதில் பூவை சுற்று விடலாம் என்று நினைக்கிறார்கள். உண்மையை சத்தியத்தை நியாயத்தை விளம்பர யுத்தத்தில் மறைக்க முடியாது.

இந்த ஐந்து ஆண்டுகளில் நீங்கள் செய்த திட்டங்கள் என்ன? தங்கள் தந்தையார் பெயரில் நூலகமும், ஜல்லிக்கட்டு அரங்கமும் அமைத்துள்ளீர்கள் .குறிப்பாக மன்னர் காலத்திலிருந்து உள்ளூர் மக்கள் ஒத்துழைப்புடன் பாரம்பரியமாக வாடிவாசலில் நடைபெற்ற ஜல்லிக்கட்டை மாற்றி ஒரு செயற்கையான ஜல்லிக்கட்டு விழாவாக நீங்கள் நடத்தி உள்ளீர்கள். இந்த ஐந்தாண்டுகளில் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை சட்டமன்றத்தில் மக்களுக்காக திட்டங்களை பற்றி பேச வேண்டும் மக்கள் குறைகளை பற்றி பேச வேண்டும் ஆனால் திமுகவின் தோழமைக் கட்சிகளோ அடிக்கும் ஜால்ராக்களில் சட்டமன்றம் ஸ்டாலின் ஜால்ரா மன்றமாக மாறிவிட்டது

மக்கள் படும் துன்பங்களை, துயரங்களை துடைக்க அக்கறை செலுத்தவில்லை ஆனால் ஸ்டாலினுக்கு புகழ் பாடும் மன்றமாகவும், பட்டிமன்றமாகவும் ஜனநாயகம் மாறி கேலிக்கூத்தாக மாறி உள்ளது. கடந்த நான்கரை ஆண்டு காலங்கள் எடப்பாடியார் நாட்டு மக்கள் செய்த திட்டங்களை விளம்பர யுத்தத்தால் மறைத்து விடலாம் என்று நினைக்கிறார்கள். நிச்சயம் வருகின்ற 17 வது சட்டமன்றத் தொடரில் எடப்பாடியார் தமிழகத்தின் முதலமைச்சராக வெற்றி பெற்று தமிழக மக்களை காப்பாற்றுவார் .
இன்றைக்கு அம்மா கொண்டு வந்த திட்டங்களை, எடப்பாடியார் கொண்டு வந்த திட்டங்களை, அதிமுக ஆட்சியில் வந்த திட்டங்களுக்கு உங்கள் பெயரை ஸ்டிக்கர் ஓட்டுகிறீர்கள் .இந்த திட்டத்தை நீங்கள் கண்டுபிடிக்கவில்லை பெற்றெடுக்கவில்லை ஆனால் செயற்கையாக விளம்பரம் செய்து வருகிறார்கள். 2026 தேர்தலில் ஜனநாயகத்தை காப்பாற்றும் வகையில் எடப்பாடியார் தலைமையில் அம்மா ஆட்சி மலரும்" என்று கூறினார் 

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்