02
Mar 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
8 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு
BY NEWS TODAY
24 Feb 2026
0
பகிர்

தமிழ்நாட்டில் 8 ஐஏஎஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 

இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்," காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கரூர் மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்த கலைச்செல்வி பொருளியல் மற்றும் புள்ளியியல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். பொருளியல், புள்ளியியல் கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயா சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்த சினேகா காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். செங்கல்பட்டு சார் ஆட்சியராக இருந்த மாலதி ஹெலன் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சார் ஆட்சியரான ரவிகுமாரை கரூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய அரசு பணியில் இருந்த சந்திர சேகர் சாகமூரி சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும முதன்மை செயல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். ஐஏஎஸ் அதிகாரியான சண்முக சுந்தரம் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஐஏஎஸ் அதிகாரியான நே.பொன்மணி ஈரோடு வணிக வரி இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்