02
Mar 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
ஷாக்... வீடு தீப்பிடித்து 5 குழந்தைகள் உள்பட 6 பேர் பலி
BY NEWS TODAY
24 Feb 2026
0
பகிர்

உத்தரப்பிரதேசத்தின் மீரட்டில் வீடு தீப்பிடித்து எரிந்ததில் 5 குழந்தைகள் உள்பட 6 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 

உத்தரப்பிரதேச மாநிலம், மீரட்டில் உள்ள லிசாடி கேட் பகுதியைச் சேர்ந்தவர் இக்பால் அகமது. இவரது வீட்டில் நேற்று நள்ளிரவு திடீரென தீப்பற்றிக் கொண்டது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அத்துடன் தீக்காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி 5 குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். இந்த தகவலை மீரட் எஸ்.பி அவினாஷ் பாண்டே உறுதிப்படுத்தினார். 

இந்த சம்பவம் குறித்து எஸ்.பி அவினாஷ் பாண்டே கூறுகையில், தீ விபத்து நேற்று நள்ளிரவு நடந்துள்ளது. காயமடைந்தவள் மீட்கப்பட்டு சிவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு 6 பேர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்," என்றார். இந்த தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்று போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்