செய்த பணியை புத்தகமாக வெளியிட்ட அதிமுக எம் எல் ஏ
BY NEWS TODAY
21 Mar 2026
0
பகிர்

செய்த பணியை புத்தகமாக வெளியிட்ட அதிமுக எம் எல் ஏ

கல்வியாளர்கள் முன்னிலையில் வெளியிட்டார் எம் எல் ஏ ராஜன் செல்லப்பா 


 மதுரை மாவட்டம் அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் ஆக இருப்பவர் ராஜன் செல்லப்பா. இவர் தற்போது திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏவாக உள்ளார்.

 இதற்கு முன்பு வடக்கு தொகுதி எம்எல்ஏவாகவும் மதுரை மேயராகவும் இருந்தார்.

 தற்போது திருப்பரங்குன்றம் தொகுதியில் தான் செய்த மக்கள் பணியை பட்டியலிட்டு புகைப்பட ஆதாரத்துடன் புத்தகமாக வெளியிட்டுள்ளார்.

 நீங்களும் தெரிந்து கொள்ளலாம் என்ற புத்தகத்தை எம் எல் ஏ ராஜன் செல்லப்பா வெளியிட பட்டிமன்ற பேச்சாளரும் பேராசிரியருமான ஞான சம்பந்தன், அரவிந்த மீரா பள்ளிகள் குழும தலைவர் சந்திரன், எஸ்பிஜே பள்ளி தாளாளர் ஜெயபிரகாசம், கே எல் என் கல்வி குழுமர் தலைவர் ஆகியோர் புத்தகத்தை பெற்றுக் கொண்டனர்.

 நிகழ்ச்சியை அதிமுக ஐடி விங் மாநில செயலாளர் ராஜ் சத்யன் தொகுத்து வழங்கினார். 

 புத்தகத்தை வெளியிட்ட எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கூறுகையில், தான் மதுரை மேயராக இருந்த போதும் வடக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த போதும் தற்போது திருப்பரங்குன்றம் தொகுதியிலும் மக்களுக்காக செய்த பணிகளையும், மக்கள் நலத் திட்டங்களை தொகுதி மக்களுக்கு பெற்றுத் தந்ததில் இருந்த பங்கு குறித்தும் புத்தகமாக வடிவமைத்து எழுதியுள்ளேன்.

 செய்த பணிகள் ஏராளம் என்றாலும் இன்னும் செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருக்கிறது. திருப்பரங்குன்றம் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்களுக்காக பணி செய்வேன் என்று தெரிவித்தார்.

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்