திமுகவில் இருந்து வந்த மன்னன், எஸ்ஸார் கோபிக்கு மாநில பதவி
BY NEWS TODAY
27 Mar 2026
0
பகிர்

 திமுகவில் இருந்து வந்த மன்னன், எஸ் ஆர் கோபிக்கு புதிய பதவி

எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு


 அழகிரியின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் முன்னாள் துணை மேயர் மன்னன். அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் கருணாநிதி காலத்தில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். அவர் திமுகவில் தங்களை மீண்டும் சேர்க்க பலமுறை முயற்சி செய்தார். ஆனால் அவரை சேர்க்கவில்லை. இதையடுத்து அவர் கடந்த மாதம் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அவரைத் தொடர்ந்து திமுகவில் செயற்குழு உறுப்பினராக இருந்த எஸ் ஆர் கோபியும் திமுகவிலிருந்து விலகி எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். 

 இருவரும் தங்களுக்கு எம்எல்ஏ சீட்டு கிடைக்க முயற்சி செய்து வருகின்றனர்.

 இந்நிலையில் மன்னனுக்கு அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளராகவும், எஸ் ஆர் கோபிக்கு கொள்கை பரப்பு இணைச் செயலாளர் பதவியும் வழங்கி எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.



----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்