தி.மு.க. மண்ணைக் கவ்வப் போவது உறுதி: விஜய் ஆவேச அறிக்கை
BY NEWS TODAY
27 Mar 2026
0
பகிர்

தி.மு.க. மண்ணைக் கவ்வப் போவது உறுதி: விஜய் ஆவேச அறிக்கை*

அரசியல் விமர்சகர், அப்துல் கலாமின் முன்னாள் உதவியாளர் என்று கூறப்படும் பொன்ராஜ் பேசிய பேச்சு ஒன்று சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.
 தமிழக வெற்றி கழகத்தில் உள்ள பெண்கள் விலைமாதர்கள் என்று அருவருக்கத்தக்க வகையில் அவர் பேசியுள்ளார்.

 இதை கண்டித்து தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை: "இந்த மண்ணின் பெருமைக்கும் போற்றுதலுக்கும் உரிய என் அம்மா, அக்கா, தங்கைகளைத் தரக்குறைவான, சொல்லொணா வார்த்தையால் தி.மு.க.வின் ஆதரவாளராகச் செயல்பட்டு வரும் கைக்கூலி ஒருவர் வாய்க்கு வந்தபடி விமர்சித்திருக்கிறார்.

தி.மு.க. தலைமையின் அரவணைப்பிலும் ஆதரவிலும் செயல்படும் இத்தகைய ஆதாய சூதாடிகளுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதுபோன்ற நபர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தி.மு.க. அரசையும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

த.வெ.க.வைச் சீண்டுவதாக நினைத்து, ஒட்டுமொத்தப் பெண்களையும் அவமதிக்கும் இச்செயலால், வருகின்ற தேர்தலில் தாய்க்குலத்தின் ஏகோபித்த முடிவால் தீய சக்தி தி.மு.க. மண்ணைக் கவ்வப் போவது உறுதி உறுதி உறுதி

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்