மதுரை மத்திய தொகுதியில் திரைப்பட இயக்குனர் சுந்தர். சி போட்டி
BY NEWS TODAY
28 Mar 2026
0
பகிர்

 அதிமுக கூட்டணியில் மதுரை மத்திய தொகுதியில் திரைப்பட இயக்குனர் சுந்தர். சி வேட்பாளராக களம் இறங்குகிறார்.


 நடைபெற இருக்கிற சட்டமன்றத் தேர்தலில் மதுரை மத்திய தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள புதிய நீதிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

 புதிய நீதி கட்சி சார்பில் களம் இறக்கப்படும் வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவார் என கட்சியின் நிறுவனர் ஏசி சண்முகம் தெரிவித்து இருந்தார்.

 இந்நிலையில் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடும் புதிய நீதி கட்சியின் வேட்பாளராக நடிகரும் திரைப்பட இயக்குனருமான சுந்தர் சி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளார்.

 இதனால் மதுரை மத்திய தொகுதி விஐபி தொகுதியாக உள்ள நிலையில் மீண்டும் முக்கியத்துவம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்