அமைச்சர் மூர்த்தியின் தேர்தல் வியூகம் எனக்கும் தெரியும் அதை உடைப்பேன் வெல்வேன்
BY NEWS TODAY
30 Mar 2026
0
பகிர்

30 ஆண்டுகளாக திமுகவில் கொடுத்த அத்தனை பணிகளை சிறப்புடன் செய்து வந்தேன் எங்களை எல்லாம் வளர்த்து ஆளாக்கிய அண்ணன் அஞ்சாநெஞ்சன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.-அழகிரிக்கு நன்றி தெரிவித்த தமிழக வெற்றிக்கழக கிழக்குத் தொகுதி வேட்பாளர் கார்த்திகேயன்*


தவெக மதுரை கிழக்கு  தொகுதி வேட்பாளர் கார்த்திகேயன் சென்னையிலிருந்து விமான மூலம் மதுரை வந்தார். மதுரை விமான நிலையத்தில் தவெக தொண்டர்கள் அவருக்கு வரவேற்பளித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:

 மதுரை கிழக்கு தொகுதியில் வேட்பாளராக அறிவித்ததற்கு நன்றி.

30 ஆண்டுகளாக திமுகவில் கொடுத்த அத்தனை பணிகளை சிறப்புடன் செய்து வந்தேன். எங்களை வளர்த்து ஆளாக்கிய அழகிரி அண்ணன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அந்த எனது திமுக பணி அந்த கழகத்திற்கு பிடிக்கவில்லையா என்று தெரியவில்லை நான் தனிமைப்படுத்தப்பட்டேன் .

 234 தொகுதியிலும் விஜய் தான் வேட்பாளர். கிழக்கு தீயிலும் தளபதி விஜய் தான் வேட்பாளர். 


அழகிரி அண்ணன் என்னுடைய குடும்பத் தலைவர் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. மாற்று கட்சி என்று பாராமல்  தந்தை மகனுக்கு வாழ்த்துவது போல் என்னை வாழ்த்தினார்.

நான் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியை சேர்ந்தவர் என்னை கிழக்கு தொகுதியில் மக்களை வைத்திருக்கிறார் என்றால் மக்கள் அவருக்கு கொடுத்த ஆதரவு தான். 

 அமைச்சர் மூர்த்தி தொகுதியில் எவ்வாறு களம் காண போகிறீர்கள் என்ற கேள்விக்கு

அவர் படிச்ச ஸ்கூல்ல தான் நானும் படிச்சிருக்கேன். அவர் என்ன வியூகம் வகுப்பார் என்று எனக்குத் தெரியும் அதை உடைக்க சக்கர வியூகம் வகுப்பேன்.

திமுக அதிமுக பெரிய கட்சி என்று சொல்லக்கூடாது இன்னும் ஒரு மாதத்தில் தமிழக வெற்றிக்கலகம் தான் பெரிய கட்சி.

 என்றார். அவர அவரது வீடு செல்லும் வழியில் மதுரை மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் ரகு பாலாஜி தாக வேட்பாளர் கார்த்திகேயனை சந்தித்து தாங்கள் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்று கூறினார். 


----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்