எடப்பாடி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி!
BY NEWS TODAY
06 Apr 2026
0
பகிர்

அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, சேலம் எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட தனது வேட்பு மனுவை இன்று (ஏப் 06) தாக்கல் செய்தார்.


தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 234 தொகுதிகளிலும் ஒரேகட்டமாக ஏப்.23-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த மார்ச் 15-ம் தேதி வெளியானது. இந்நிலையில், தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. மனுக்கள் பரிசீலனை நாளை நடைபெறுகிறது. இறுதி வேட்பாளர் பட்டியல் ஏப்.9-ம் தேதி வெளியாகிறது.


இதனிடையே, சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப் 06) வேட்பு மனு தாக்கல் செய்தார். இவர் 8-வது முறையாக எடப்பாடியில் களம் காண்கிறார். அதோடு, மயிலம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சி.வி.சண்முகம் உள்ளிட்டோரும் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர்.


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “243 தொகுதிகளில் 210 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெல்லும். வரும் 15-ம் தேதி நடைபெற உள்ள பிரதமர் மோடியின் குமரி பிரச்சாரத்தில் பங்கேற்க உள்ளேன்.


திமுக ஆட்சியில் முடக்கி வைக்கப்பட்டுள்ள அதிமுகவின் திட்டங்கள் மீண்டும் கொண்டு வரப்படும். பெரும்பான்மையோடு அதிமுக கூட்டணி தான் ஆட்சி அமைக்கும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

-பழனிவேல்ராஜன்-தேனி



----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்