தமிழக மக்களின் காதுகள் பாவம் இல்லையா.. தொடர்ந்து காது குத்தும் முதல்வரே
BY NEWS TODAY
09 Apr 2026
0
பகிர்

 தமிழக மக்களின் காதுகள் பாவம் இல்லையா..

தொடர்ந்து காது குத்தும் முதல்வரே

அதிமுக எம்பி இன்பத் துரை கேள்வி



 தமிழகத்திற்கும் டெல்லிக்கும் நடக்கும் தேர்தல் என்று முதல்வர் ஸ்டாலின் அடிக்கடி கூறி வருகிறார். அதற்கு பதிலடி தரும் வகையில், தனது எக்ஸ் வலைத்தளத்தில் அதிமுக ராஜ்யசபா எம்பி இன்பதுரை தனது எக்ஸ் வலைதளத்தில், " நடைபெறும் இந்தத் தேர்தல் டெல்லிக்கும் தமிழகத்துக்குமானது இல்லை, ஸ்டாலின் குடும்பத்தினருக்கும் தமிழக மக்களுக்கும் இடையே நடக்கும் தேர்தல்" என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ட்விட் செய்துள்ளார்.

 இது குறித்து இன்பதுரை எம்பி நம்மிடம் கூறுகையில் கூறுகையில், ' தமிழக முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக நடக்கும் தேர்தல் இது. ஆனால் தேவையில்லாமல் டெல்லிக்கும் தமிழகத்திற்கும் தேர்தல் என்று அடிக்கடி கூறுகிறார். யாரையோ காப்பாற்றுவதற்காக அல்லது யாரையோ திருப்தி படுத்த இவ்வாறு தொடர்ந்து கூறி வருகிறார். 

 எடப்பாடி முதல்வரானால் அனைத்து உரிமைகளும் பறிபோகும் என்று பேசுகிறார்.

 உண்மையில் தமிழகத்தின் அனைத்து உரிமைகளும் பறிபோனது திமுக ஆட்சியில் தான்.

 முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி நீரை தேக்கலாம் என்ற உத்தரவை இதுவரை கண்டு கொள்ளாமல் இருக்கிறது திமுக அரசு. 

 அதிமுக பெற்றுத் தந்த உரிமையை இன்ச் அளவு கூட எடுத்து வைக்காதது திமுக அரசு.

 ஜல்லிக்கட்டு உரிமையை பறி கொடுத்தது திமுக. அந்த உரிமையை மீட்டுத் தந்தது அதிமுக. காவிரி மேலாண்மை வாரியத்தை கொண்டு வந்தது அதிமுக.

 மேகதாது தடுப்பணை கட்ட கர்நாடக அரசு விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து அதற்கான நிதியையும் ஒதுக்கி உள்ளது. இதை தடுப்பதற்கு திமுக அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

 இவ்வாறு ஒவ்வொரு உரிமைகளையும் பறிகொடுத்த திமுக முதல்வர் அதிமுகவை குறை கூறுவதற்கு தகுதியே இல்லை. அவர் யாரையோ திருப்தி படுத்துவதற்கு அல்லது யாரையோ காப்பாற்றுவதற்காக இவ்வாறு பேசி மக்களை திசை திருப்ப பார்க்கிறார்.

 தொடர்ந்து தமிழக மக்களுக்கு நீங்கள் காது குத்திக் கொண்டே இருந்தால் தமிழக மக்களின் காதுகள் வலிக்காதா". 

 இவர் அவர் கூறினார்.

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்