திமுக ₹8,000 மாதிரி கூப்பன் தந்தால் வழக்கு பதிவு
BY NEWS TODAY
16 Apr 2026
0
பகிர்

திமுக ₹8,000 மாதிரி கூப்பன் தந்தால் வழக்கு பதிவு

தேர்தல் ஆணையம் நடவடிக்கை


திமுகவின் தேர்தல் அறிக்கையில் திமுக ஆட்சிக்கு வந்ததும் 8000 ரூபாய் மதிப்பு கூப்பன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

 நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 8000 ரூபாய் மாதிரி கூப்பன்களை திமுகவினர் வாக்காளர்களுக்கு வழங்கி வருகின்றனர். 

 நிலையில் தேர்தல் ஆணையம் ஒரு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கியுள்ளது.

 அதில், "திமுகவினர் ரூ.8,000 கூப்பன் மாதிரிகளை மக்களுக்கு வழங்கினால் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்படும். ஆணைய அனுமதி பெறாமல் அச்சடிக்கப்படும் கூப்பன், துண்டு பிரசுரங்களை விநியோகிக்கக் கூடாது; நடத்தை விதிகளை மீறி மாதிரி கூப்பன்களை வழங்கினால் 127 மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் சில மாவட்டங்களில் ரூ.8000 கூப்பன் வழங்கியது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்