19
Apr 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
பெண்களின் பிரதிநதித்துவத்தை ஏன் எதிர்த்தார்கள்? என்று திமுகவினரை கேளுங்கள்..!
BY NEWS TODAY
18 Apr 2026
0
பகிர்

பெண்களின் பிரதிநதித்துவத்தை ஏன் எதிர்த்தார்கள்? என்று திமுகவினரை கேளுங்கள்..!

கோவை பொதுக்கூட்டத்தில் தமிழக மகளிருக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்:

மு.பழனிவேல்ராஜன்-கோவை:ஏப்.18

மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவிற்கு எதிராக திமுக எம்பிக்கள் நேற்று வாக்காளித்தனர். இந்நிலையில் தான் ''தமிழ்நாட்டின் ஒவ்வொரு சகோதரிகளிடமும் ஒன்றை கூறிக்கொள்கிறேன். திமுகவினரை எங்கே பார்த்தாலும் அவர்களிடம் கேள்வி எழுப்புங்கள். பெண்களின் பிரதிநதித்துவத்தை ஏன் எதிர்த்தார்கள்? என்று கேள்வி கேளுங்கள். பொன்னான வாய்ப்பை தமிழ் பெண்களுக்கு ஏன் மறுத்தார்கள்? என்று கேள்வி கேளுங்கள். ஏப்ரல் 23ம் தேதி தெளிவான, பலமான செய்தியை திமுகவுக்கு அளிக்க வேண்டும்'' என்று கோவை பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி ஆக்ரோஷமாக கூறியுள்ளார்.

கோவை என்டிஏ பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார். இதுதொடர்பாக பிரதமர் மோடி பேசியதாவது:

''புத்தாண்டு என்பது புதிய நம்பிக்கை. புதிய சக்தி. புதிய தொடக்கம். அந்த வரிசையில் தமிழக அரசியலில் புதிய அத்தியாயம் எழுதப்பட்டு வருகிறது. தமிழக மக்கள் தெளிவான செய்தியை அளிக்கின்றனர். என்டிஏவுக்கான வெற்றி. திமுகவின் வெளியேற்றம் என்ற செய்தியை மக்கள் கூறுகின்றனர்.

கொங்கு நாட்டு மக்கள் குறிப்பாக கோவை மக்கள் கடும் உழைப்பாளிகள். பாசமான மக்களுக்கு சொந்தமான பூமி இது. பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எப்போதும் உறுதியாக ஆதரவு அளித்து வந்துள்ளீர்கள். இதனால் நான் நான் எப்போது இங்கு வந்தாலும் உங்களில் ஒருவனாக உணர்கிறேன்.

நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தோற்கடித்துள்ளது. இந்த மசோதா மட்டும் சட்டமாகி இருந்தால் சாதாரண பெண்கள் எம்பி, எம்எல்ஏக்களாகி ஆகியிருப்பார்கள். இந்த மசோதா வழியாக தமிழகத்துக்கு அதிக இருக்கைகள் கிடைக்க இருந்தது. ஆனால் இதை திமுக விரும்பவில்லை.

நான் தமிழ்நாட்டின் ஒவ்வொரு சகோதரிகளிடமும் ஒன்றை கூறிக்கொள்கிறேன். திமுகவினரை எங்கே பார்த்தாலும் அவர்களிடம் கேள்வி எழுப்புங்கள். பெண்களின் பிரதிநதித்துவத்தை ஏன் எதிர்த்தார்கள்? என்று கேள்வி கேளுங்கள். பொன்னான வாய்ப்பை தமிழ் பெண்களுக்கு ஏன் மறுத்தார்கள்? என்று கேள்வி கேளுங்கள். ஏப்ரல் 23ம் தேதி தெளிவான, பலமான செய்தியை திமுகவுக்கு அளிக்க வேண்டும்'' என்று சாடினார்.



----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்