ஸ்பெயினில் ரயிலோடு ரயில் மோதி பயங்கர விபத்து: 21 பேர் பலி
BY NEWS TODAY
19 Jan 2026
0
பகிர்

ஸ்பெயினில்  தடம் புரண்ட ரயில் மீது அதிவேகமாக வந்த  மற்றொரு ரயில் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.



ஸ்பெயின் நாட்டின் கோர்டோபா மாகாணத்தில் அதிவேகமாக வந்த  இர்யோ ரயில் எதிர்பாராத விதமாக தடம்புரண்டது. இந்த ரயில் மலாகாவில் இருந்து மேட்ரிட் - புவர்டா டி அடோசா நோக்கி சென்றது. அடாமுஸ் அருகே வந்த போது அந்த ரயில் தடம் புரண்டது. அப்போது மேட்ரிட்- ஹுல்வா வழித்தடத்தில் வந்து கொண்டிருந்த  ரயில் அதிவேகத்தில் வந்து மோதியது. இதனால் பெட்டிகள் தடம் புரண்டன. ரயில் பெட்டிகளுக்குள் சிக்கிக் கொண்டவர்கள், ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து தப்பினர்.



ஆனாலும், இந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.அவர்களில் 25 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அரசு செய்தி நிறுவனமான எஸ்பானோலா தெரிவித்துள்ளது. 


----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்