'உயிரை வாங்குகிறார்கள்'- காங்கிரஸார் மீது அமைச்சர் ராஜகண்ணப்பன் பாய்ச்சல்!
BY NEWS TODAY
10 Feb 2026
0
பகிர்

காங்கிரஸில்  ஒருவர், இருவர் இருந்து கொண்டு உயிரை வாங்குகிறார்கள் என்று வனத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி பெரும் குடைச்சலைக் கொடுத்து வருகிறது. ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தொடர்ந்து வலியுறுத்தி வருவதுடன், திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி கிடையாது என திமுக வலியுறுத்தியுள்ளது. இந்த நிலையில், எந்த காலத்திலும் கூட்டணி ஆட்சி கிடையாது என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.



புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தில் தமிழக வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறுகையில், "பிரதமரை எதிர்த்து பேசக்கூடிய ஆற்றல் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தான் உள்ளது. எல்லோருக்கும் எல்லாம் தான் திராவிட மாடல் அரசின் கொள்கை. காங்கிரஸில் ஒருவர் இருவர் இருந்து கொண்டு உயிரை வாங்குகிறார்கள். 100 இடங்களில் வென்று கலைஞர் முதல்வராக இருந்தாரே, ஆட்சியில் பங்கு கொடுத்தாரா? 150 இடங்களில் திமுக ஜெயிக்கும் போது எப்படி கொடுக்கும்? நீங்கள் வேண்டுமென்பதை கேளுங்கள்; செய்து தருகிறோம்; எந்த காலத்திலும் கூட்டணி ஆட்சி கிடையாது 



1967-ம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது, அப்புறம் அவர்களால் வர முடிந்ததா?  தமிழ்நாட்டில் வளர்ந்து வந்த இயக்கமாக திமுக உள்ளது. திராவிட இயக்கத்தை வெல்ல இனிமேல் ஒருவன் பிறந்து வர வேண்டும். நேற்று கூட நானும் செல்வப் பெருந்தகையும் ஒரு திருமண நிகழ்வில் சந்தித்துக் கொண்டோம். என்ன செய்வது கூட்டணியில் இருக்கிறார்கள். போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறோம் போய் நிற்கிறோம். தனியா நிக்கனும் என்றாலும் ரெடி” என்றார்..

 


----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்