02
Mar 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
ஆளுநரின் கான்வாய்க்குள் புகுந்து பீதியை ஏற்படுத்திய பைக்- போலீஸ் அதிரடி நடவடிக்கை!
BY NEWS TODAY
10 Feb 2026
0
பகிர்

 தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் காரை பின் தொடர்ந்து பைக்கில் சென்ற போதை இளைஞர்கள் இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.



தமிழக ஆளுநர் ஆர்.என்.‌ ரவி  திருவான்மியூரில் நடைபெற்ற  திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நேற்று (பிப்ரவரி 9) இரவு கலந்துகொண்டார். இதன் பின் நிகழ்ச்சி முடிந்து அங்கிருந்து  காரில் புறப்பட்டு ஆளுநர் மாளிகை நோக்கி வந்து கொண்டிருந்ததார். அவரின் காருக்கு முன்னும் பின்னும் போலீஸாரின் கான்வாய் வாகனங்கள் பாதுகாப்புக்கு வந்தன.



சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை அருகே ஆளுநரின் கான்வாய் சென்ற போது, திடீரென இரண்டு இளைஞர்களுடன் வந்த பைக், ஆளுநர் கான்வாயில் புகுந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த போலீஸார், அந்த பைக்கை மடக்கிப் பிடிக்க முயன்றனர். ஆனால், அந்த இளைஞர்கள் வேகமாக அங்குமிங்குமாக சென்று சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் வரை ஆளுநர் காரை பின்தொடர்ந்து சென்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.



இதையடுத்து, ஆளுநர் கான்வாய் ராஜ் பவனுக்குள் சென்றது. அப்போது அங்கு தயாராக இருந்த போலீஸார், பைக்கில் வந்த இளைஞர்களை மடக்கி பிடித்தனர். அப்போது அந்த இளைஞர்கள் இருவரும் மது போதையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை  கிண்டி காவல் நிலையத்தில் போலீஸார் ஒப்படைத்தனர். அங்கு நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஜீவா (22), கள்ளக்குறிச்சியை சேர்ந்த அன்புராஜ் (23) என்பது தெரிய வந்தது. அவர்கள் இருவரும் பெருங்குடி பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் ஹவுஸ் கீப்பிங் வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது.



அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நேற்று இரவு இருவரும் மது அருந்தி விட்டு பைக்கில் வரும் போது, அடையாறு புற்று நோய் மருத்துவமனை அருகே போக்குவரத்து போலீஸார் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தததால், மாட்டிக் கொள்வோமோ என்ற அச்சத்தில், ஆளுநர் கான்வாய்க்குள் புகுந்ததாக வாக்குமூலம் அளித்தனர். இதையடுத்து, இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீஸார், அவர்களை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் சென்னையில் நேற்று இரவு பரபரப்பு நிலவியது. 


----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்