02
Mar 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
அமைச்சர் துரைமுருகன் உடல்நிலை- மருத்துவமனை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை
BY NEWS TODAY
11 Feb 2026
0
பகிர்

திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.



திமுக பொதுச்செயலாளரும், மூத்த அமைச்சருமான துரைமுருகன், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயது மூப்பு காரணமாக அவ்வப்போது ஏற்படும் உடல்நலக்குறைபாடுகள் காரணமாக தொடர் மருத்துவப் பரிசோதனைகள் அவருக்கு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக அடிக்கடி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்.



இந்த நிலையில், அமைச்சர் துரைமுருகன் வீட்டில் நேற்று தவறி கீழே விழுந்ததில் காயம் அடைந்ததாகவும் இதனைத்தொடர்ந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து  அமைச்சர் துரைமுருகனுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், " கால் வலி காரணமாக அமைச்சர் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், அடுத்த சில நாட்கள் ஓய்வில் இருக்க அறிவுறுத்தியுள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்