02
Mar 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
கர்ப்பப்பை வாய் புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜல்லிக்கட்டு
BY NEWS TODAY
11 Feb 2026
0
பகிர்

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி விழிப்புணர்வுக்காக ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி



 



 மதுரை மாவட்ட அனைத்து ரோட்டரி சங்கங்கள் இணைத்து ஒரு 14ஆம் தேதி நடத்துகிறது.



 



 



 வளர் இளம் பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்று நோய் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



 இத்தடுப்பூசி 9 வயது முதல் 14 வயது வரை உள்ள அரசு பள்ளி மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு ரோட்டரி சங்கங்கள் சார்பில் இலவசமாக தடுப்பூசி போடப்படுகிறது.



 இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து ரோட்டரி சங்கங்கள் இணைந்து வரும் 14ஆம் தேதி சனிக்கிழமை அன்று அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரை ஏறுதழுவுதல் மைதானத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்துகிறது.



 இதில் 800 காளைகள் 600 மாடுபிடி வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.



 மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி மூர்த்தி கொடியசைத்து துவக்கி வைக்கிறார்.



 ரோட்டரி மாவட்டம் 3000 ஆளுநர் ஜே. கார்த்திக், சர்வதேச ரோட்டரி சங்கத்தின் இயக்குனரும், துணைத் தலைவர் தேர்வு திரு. எம். முருகானந்தம், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு பிரவீன் குமார் ஐஏஎஸ், மதுரை மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் அரவிந்த் ஐபிஎஸ், சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கின்றனர். 



 இது குறித்து நிகழ்ச்சி தலைவர் மொட்டைய சாமி, செயலாளர் செந்தில், பாரதி இன்ஃபினிட்டி மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ஆழ்வார் ராமானுஜம், டாக்டர் ரேணுகா தேவி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், வளர் இளம் பெண்களுக்கான கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அதிக அளவில் பாதிக்கப்படுவதால் இந்திய அளவில் 800 பெண்கள் இறக்கின்றனர். வெளிநாடுகளில் இதற்கான தடுப்பூசி கண்டு பிடிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்துகின்றனர்.



 ஆனால் நம் நாட்டில் இதற்கான விழிப்புணர்வு இல்லை.



 இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அடித்தட்டு மக்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ரோட்டரி சங்கங்கள் இணைந்து விழிப்புணர்வுக்காக ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. ரோட்டரி மாவட்டம் 3000 ஆளுநர் கார்த்திக் அவர்களின் கனவு திட்டமாக வரும் ஜூன் மாதத்திற்குள் ஒரு லட்சம் இளம் பெண்களுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.



 இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் 800 காளைகள் 600 மாடுபிடி வீரர்கள் கலந்து கொள்கின்றனர். சிறந்த மாடுபிடி வீரருக்கு கேடிஎம் பைக் வழங்கப்படுகிறது. சிறந்த காளைக்காக காங்கேயம் நாட்டு பசு மாடும் கன்றும் பரிசாக வழங்கப்படுகிறது. இது தவிர வழக்கமான பரிசுகள் மாடுகளுக்கு மாடுபிடி வீரர்களுக்கும் வழங்கப்படுகிறது. 



 இந்நிகழ்ச்சியை தலைவர் மொட்டையா சாமி செயலாளர் செந்தில், துணைத் தலைவர் சிவக்குமார் மண்டல ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், உதவி ஆளுநர்கள் நெல்லை பாலு, சுரேஷ் பாண்டியன், ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்க தலைவர் கதிரவன், அனைத்து ரோட்டரி சங்கங்களின் தலைவர்கள் பிரவீன் குமார், அல் காசிம், செயலாளர் பிரசன்னா, பொருளாளர் ரம்யா ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடு செய்து வருகிறார்கள்.


----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்