02
Mar 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
அதிமுக அலுவலகம் புகுந்து கொலைவெறி தாக்குதல்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்
BY NEWS TODAY
12 Feb 2026
0
பகிர்

கோவையில் அதிமுக அலுவலகத்திற்குள் கத்தி, அரிவாள் ஆயுதங்களுடன் நுழைந்து கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.



இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி அவரது எக்ஸ் வலைதளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், " கோவை மாநகர் மாவட்டம், சிங்காநல்லூர் அருகே உள்ள ஒண்டிப்புதூர் வார்டு எண். 56, சுங்கம் பகுதியில் கடந்த 5 நாளுக்கு முன் பொதுவெளியில் மது அருந்திக் கொண்டிருந்த நபர்களை, இங்கு மது அருந்தக் கூடாது என அறிவுறுத்திய அதிமுக வட்டச் செயலாளர் சுரேஷ்குமார் கட்சி அலுவலகத்தில் கட்சிப் பணிகளை கவனித்து கொண்டிருந்தபோது, 5 நபர் கொண்ட கும்பல் புகுந்து கத்தி, அரிவாள் ஆயுதங்களுடன் வந்து, கொலைவெறி தாக்குதல் நடத்திய செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.



இச்சம்பவத்தில் கட்சியின் வட்ட செயலாளர் சுரேஷ்குமார், கோவை மாநகர் மாவட்டப் பாசறை இணைச் செயலாளர் ஈசா டி.செந்தில் ஆகியோர் மற்றும் தடுக்க வந்த பொதுமக்களும் படுகாயம் அடைந்துள்ளனர். பிரதான எதிர்க்கட்சியின் அலுவலகத்திற்குள் புகுந்து, கட்சியினரைத் தாக்கும் அளவிற்கு குற்றவாளிகள் துணிந்திருப்பதற்கு ஒரே காரணம், இங்கு ஆட்சியில் இருக்கும் சட்டம் - ஒழுங்கைக் காக்கத் திராணியற்ற முதல்வரின் கையாலாகாத தி.மு.க. அரசுதான்.

குற்றவாளிகளின், போதைப் பேர்வழிகளின் புகலிடமாக, சொர்க்க பூமியாக தமிழகத்தை சீர்குலைத்துள்ள ஸ்டாலின் மாடல் தி.மு.க. அரசுக்கு எனது கடும் கண்டனம்.



கட்சியினர் மீதும், பொதுமக்கள் மீதும் கொலைவெறித் தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார். 


----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்