02
Mar 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
முதல்வர் ஸ்டாலினுக்கு தோல்வி பயம்- ஜெயக்குமார் பேட்டி
BY NEWS TODAY
13 Feb 2026
0
பகிர்

சட்டமன்றத் தேர்தல் தோல்வி பயத்தால் ரூ.2000 தருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

மகளிர் உரிமைத்தொகையாக பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம், கோடைக்கால சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம் என 5 ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 13) அறிவித்துள்ளார். அரசின் இந்த அறிவிப்பால் மகளிர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆனால், தோல்வி பயத்தால் தான் மகளிர் உரிமைத் தொகையை ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். 

இதுகுறித்து மேலும் கூறுகையில்," சட்டமன்றத் தேர்தலில் ஓட்டு வாங்க வேண்டும் என்பதற்காக மட்டுமே உரிமைத்தொகை உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் ரூ.1000 வழங்கப்படும் என வாக்குறுதி கொடுத்துவிட்டு திமுக வழங்கவில்லை. அத்துடன் கல்விக்கடன் ரத்து, டீசல் விலை குறைப்பு போன்ற வாக்குறுதிகளை திமுக அரசு செய்து கொடுக்கவில்லை" என்றார். 

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்