02
Mar 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
எகிப்து கல்வெட்டில் தமிழ் பிராமி எழுத்துகள்- கனிமொழி எம்.பி மகிழ்ச்சி
BY NEWS TODAY
13 Feb 2026
0
பகிர்

எகிப்து நாட்டில் பழமையான கல்வெட்டுகளில் தமிழ் பிராமி எழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள செய்தி மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவரது எக்ஸ் பதிவில், " எகிப்து நாட்டின் ‘மன்னர்களின் பள்ளத்தாக்கு’ பகுதியில் அமைந்துள்ள பிரமிடுகளில் உள்ள பழமையான கல்வெட்டுகளில் தமிழ் பிராமி எழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள செய்தி மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. பழந்தமிழர்களின் கடல் கடந்த பயணங்கள், பன்னாட்டு வணிகத் தொடர்பு மற்றும் உலகின் பிற நாகரிகங்களுடனான உறவு குறித்து மேலும் பல புதிய ஆய்வுகள் மேற்கொள்வது காலத்தின் கட்டாயமாகத் தோன்றுகிறது. 

அப்படியான ஆய்வுகள், பண்டைய தமிழ் நாகரிகத்தின் சிறப்புகளைப் பறைசாற்றுவதுடன், இந்த நவீன யுகத்திலும் சரியான வெளியுறவுக் கொள்கைகளை வகுத்து, இந்த நாட்டின் பாதுகாப்பை - பொருளாதார நலனை - தனித்துவத்தை உறுதி செய்ய முடியாமல் திணறும் ஒன்றிய பாஜக அரசுக்கு பாடம் கற்றுக்கொள்ள உதவிகரமாக அமையும்" என்று பதிவிட்டுள்ளார். 

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்