02
Mar 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
ஹெச்.ராஜாவை நேரில் சென்று நலம் விசாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!
BY NEWS TODAY
14 Feb 2026
0
பகிர்

சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஹெச்.ராஜாவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். 

சென்னையில் நடைபெற்ற தனியார் செய்தி நிறுவனத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா உடல்நலக்குறைவால் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்தவர்கள், மேல் சிகிச்சைக்காக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ஹெச்.ராஜாவுக்கு தீவிர சிகிச்சை அளிகக்ப்பட்டது.

இந்த நிலையில், ஹெச் ராஜாவுக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஹெச்.ராஜாவை அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஹெச்.ராஜாவிடம் நலம் விசாரித்தார்.அதற்கு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து ஹெச்.ராஜா தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். 

அந்த பதிவில்," தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு எம்.பி அவர்களும் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஹெச்.ராஜா ஜி அவர்களை இன்று இரவு 7.50 மணிக்கு நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தனர். தான் விரைவில் பூரண குணமடைந்து நலமோடு மக்கள் பணியாற்ற தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு எம்.பி அவர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்