02
Mar 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
காதலைத் தடுக்க நாம் யார்?-கவிஞர் வைரமுத்து கேள்வி
BY NEWS TODAY
14 Feb 2026
0
பகிர்

உதடுகளை மாற்றி மாற்றி முத்தங்கள் பயணப்படுவதுபோல் இதயங்களை மாற்றி மாற்றிக் காதல் பயணப்படுகிறது என்று கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்து கூறியுள்ளார். 

உலகம் முழுவதும் இன்று (பிப்ரவரி 14) காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு, கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,

காதல் எனும் உயிர்ப்பண்பு
ஆண் பெண்
மாமிசத்தோடு மட்டும்
சம்பந்தப்பட்டதில்லை
எல்லா நிலைகளிலும்
எல்லா வயதினிலும்
அது நிகழ்ந்துகொண்டே இருக்கிறது
'பெருந்தேன் இழைக்கும்
நாடனொடு நட்பே' என்று
சங்கத் தலைவி பாடுமிடத்து
உடற்புணர்ச்சி காதலாகிறது
'காதலாகிக் கசிந்து
கண்ணீர் மல்கி'
என்று பாடும்பொழுது
கடவுள் பக்தி காதலாகிறது
'காதல் திருமகன்' என்று
தசரதன் தளும்புகிறபோது
பாசம் காதலாகிறது
உதடுகளை மாற்றி மாற்றி
முத்தங்கள் பயணப்படுவதுபோல்
இதயங்களை மாற்றி மாற்றிக்
காதல் பயணப்படுகிறது
மனிதர் உள்ளவரை மட்டுமல்ல
இடம் பெயரும்
உயிர்கள் உள்ளவரை
காதல் இருக்கும்
உடலோடு தொடங்கி
உடல் தாண்டி
உயிரில் ஐக்கியமாகிறபொழுது
காதல் தன் புனிதயாத்திரையில்
பூரணம் பெறுகிறது
எல்லாக் காதலுக்கும்
இது நேர்வதில்லை
இன்று விற்பனையாகும்
250 மில்லியன் ரோஜாக்களும்
குழல் சேர்வதில்லை.
ஆனாலும் ரோஜாக்கள்
பூக்கவே பூக்கும்;
ஆனாலும் காதல்
மலரவே மலரும்
காதலைத் தடுக்க
நாம் யார்?
தானாய்த் தோன்றித்
தானாய் மறையும்
சந்திர சூரியர்
போன்றது காதல்
வாழ்க காதலே;
பூமியை வாழவை..!
என்று  பதிவிட்டுள்ளார். 

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்