02
Mar 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
திமுக கூட்டணி கட்சியினர் அமைச்சராக வருவதில் தவறில்லையே?- மாணிக்கம் தாகூர் கேள்வி
BY NEWS TODAY
16 Feb 2026
0
பகிர்

திமுக கூட்டணியில் உள்ளவர்கள் அமைச்சராக வருவதில் ஒரு தப்பும் இல்லையே என்று காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார். 

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள சூழலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியில் உள்ள சிலர் கொடுக்கும் குடைச்சல் அறிவாலய தலைவர்களுக்கு ஆவேசத்தை ஏற்படுத்தி வருகிறது. ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் எம்.பிக்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி ஆகியோர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிக்கு வழியில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் அளித்த பேட்டியில், " திமுகவின் தனிப்பட்ட வாக்கு வங்கி 24 சதவீதம் தான். ஆனான், நாம் எல்லாரும் ஒன்றாக சேரும்போதுதான் அது 36 அல்லது 43 சதவீமாகிறது. அப்படியென்றால், அந்த வெற்றியில் எல்லாருக்கும் பங்கு இருக்கணும்ல? 

காங்கிரஸ் கட்சியினர் இண்டு பேர் அமைச்சர்களாக இருந்தால் என்ன தப்பு? விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள்னு கூட்டணிக் கட்சிகளில் உள்ளவர்கள் நல்லவர்கள், விவரம் தெரிந்தவர்கள். அப்படிப்பட்டவர்கள் அமைச்சர்களாக வருவதில் ஒரு தப்பும் இல்லையே? கடந்த 2016-ம் ஆண்டு 41 தொகுதிகளில் போட்டியிட்டோம், ஆனால் 2021-ம் ஆண்டு அது 25 தொகுதிகளாக குறைந்தது. இது காங்கிரஸ் கட்சிக்குள் வருத்தத்தை உண்டாக்கியுள்ளது.. இதைத் தொடர்ந்து நியாயப்படுத்திக்கிட்டே இருக்க முடியாது 

என்னதான் வருத்தம் இருந்தாலும், முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் மீண்டும் முதல்வராக வரணும்ங்கிறதுல நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அவரை முதல்வராக்குவதற்காக தொடர்ந்து பாடுபடுவோம்" என்றார். 
 

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்