02
Mar 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
நடிகை திரிஷா மீது கடும் விமர்சனம்- நயினார் நாகேந்திரன் விளக்கம்
BY NEWS TODAY
16 Feb 2026
0
பகிர்

யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். 

சேலத்தில் தவெக தலைவர் விஜய் நடத்திய மக்கள் சந்திப்பு கூட்டத்தில், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். இதற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனத்தை தெரிவித்தார். அப்போது அவர் பேசுகையில், , விஜய் அரசியல் அனுபவமில்லாதவர். முதலில் வீட்டிலிருந்து வெளியே வர வேண்டும். திரிஷா வீட்டிலிருந்து வெளியே வர வேண்டும். குடும்பத்துடன் நல்லுறவு வைத்திருக்க வேண்டும்” என்று பேசியது சர்ச்சையானது. 

இதற்கு தவெகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். தனிப்பட்ட வாழ்க்கையை எப்படி நயினார் நாகேந்திரன் விமர்சிக்கலாம் என்று தவெக மட்டுமின்றி திமுக எம்.பிக்கள் கனிமொழி, தமிழச்சி தங்கப்பாண்டியன் உள்ளிட்டோர் கண்டித்தனர். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இந்த விவகாரம் குறித்து கூறுகையில், “நயினார் நாகேந்திரன் பகிரங்கமாக வருத்தம் தெரிவிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். 

இந்த நிலையில், மதுரையில் இன்று (பிப்ரவரி 16) பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், டாக்டர் ராமதாஸ் பகிரங்க வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று உங்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளாரே என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு , “என்னைப் பொறுத்தவரை தனிப்பட்ட முறையில் யாருடைய மனதும் புண்படக் கூடாது என்று நினைப்பவன். திமுக கூட்டணியில் தான் பிளவு இருக்கிறதே தவிர தேசிய ஜனநாயக கூட்டணியில் பிளவு இல்லை. திமுக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என தினந்தோறும் மாணிக்கம் தாகூர் பேட்டி கொடுத்து வருகிறார். திமுக கூட்டணி தான் வலுவாக இல்லை. இபிஎஸ் மற்றும் பல கூட்டணி கட்சிகளால் பாஜக பலமாக உள்ளது. இபிஎஸ் தலைமையில் நல்லாட்சி மலரும். முதலில் விஜய் கட்சிக்கு கொள்கை இருக்கிறதா? அப்படி இருந்தால் அந்த கொள்கைகளை தெளிவாக காட்டட்டும்" என்று பதிலளித்தார். 

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்