02
Mar 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
நயினார் நாகேந்திரன் பகிரங்க மன்னிப்பு கேட்க நாஞ்சில் சம்பத் வலியுறுத்தல்!
BY NEWS TODAY
16 Feb 2026
0
பகிர்

தொடர்ந்து கொச்சையான அநாகரீக மனிதாபிமானமற்ற கருத்தை வெளியிட்டு வரும் நயினார் நாகேந்திரன் உடனடியாகத் தனது பேச்சிற்குப் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தவெக பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறினார். 

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மதுரையில் இன்று (பிப்ரவரி 16) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "விஜய் கூட்டங்களில் உயிரிழப்புகள் நடந்தது நல்ல சகுணம் தானே" என சிரித்துக் கொண்டே கூறினார். இதற்கு தவெக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக தவெக பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் அவரது எக்ஸ் தளப் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், " அரசியலில் புதிய பாய்ச்சலை நிகழ்த்தி வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் எழுச்சியைக் கண்டு அஞ்சும் சக்திகள், இன்று தங்களின் மனிதாபிமானமற்ற முகத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அறிவாலயக் கொத்தடிமை ஊதுகுழலாகவே மாறிவிட்ட கமலாலய கள்ளக்கூட்டணி தலைவருக்கு கண்டனம். ஒருவர் உயிரிழந்த நிகழ்வு 'நல்ல சகுனம்' என்று கேலி செய்துள்ள பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் பேச்சு அடிப்படை மனிதாபிமானம் அற்றது.

அரசியல் நாகரிகம் என்பது எதிரிகளுக்கும் பொதுவானது. ஆனால், அதிகார மமதையில் இருப்பவர்களுக்கும், தங்களை அறிவாலயத்தின் 'கொத்தடிமை ஊதுகுழலாக' மாற்றிக்கொண்டு செயல்படும் கமலாலயத்தின் 'கள்ளக்கூட்டணி' தலைவர்களுக்கும் மனிதாபிமானம் என்றால் என்னவென்றே தெரியவில்லை. திராவிட மாடல் என்று தம்பட்டம் அடிக்கும் திமுகவும், அவர்களுக்கு மறைமுகமாகத் துணை போகும் பாஜகவும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்பது இந்த இழிவான கருத்தின் மூலம் மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது. மரணத்தில் கூட அரசியல் லாபம் தேடும் இந்த 'கள்ளக்கூட்டணி' மனநிலை அருவருக்கத்தக்கது. ஒரு இழப்பை ஏளனம் செய்வது, தமிழக வெற்றிக் கழகத்தின் கோடிக்கணக்கான தம்பிகளின் இதயங்களில் நெருப்பை மூட்டுவதற்குச் சமம். மக்களின் உணர்வுகளோடு விளையாடும் இதுபோன்ற தலைவர்கள், வரும் தேர்தலில் மக்களால் தக்க பாடம் புகட்டப்படுவார்கள். 

அறிவாலயத்தின் ஆணைக்கிணங்க செயல்படும் இத்தகைய ஊதுகுழல்கள், நமது கழகத்தின் வளர்ச்சியைத் தடுக்கப் போடும் சதித் திட்டங்கள் அனைத்தும் தவிடுபொடியாகும். மக்களின் துயரத்தில் இன்பம் காணும் இத்தகைய நச்சுக்கருத்துக்களைத் தமிழக வெற்றிக் கழகம் ஒருபோதும் சகித்துக் கொள்ளாது. தொடர்ந்து கொச்சையான அநாகரீக மனிதாபிமானமற்ற கருத்தை வெளியிட்டு வரும் நயினார் நாகேந்திரன் உடனடியாகத் தனது பேச்சிற்குப் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்