02
Mar 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
வேலூரில் விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு 20 நிபந்தனைகள்!
BY NEWS TODAY
18 Feb 2026
0
பகிர்

வேலூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு போலீஸார் 20 நிபந்தனைகளை விதித்துள்ளனர்.   

வேலூர் மாவட்டம், அகரம்சேரியில் பிப்ரவரி 23-ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதற்காக அகரம்சேரியில் 33 ஏக்கரில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக்கோரி தவெக வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமையிலான நிர்வாகிகள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்தனர். 

இந்த நிலையில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள், பாதுகாப்பு மற்றும் அனுமதி வழங்குவது தொடர்பாக 20 நிபந்தனைகள் அடங்கிய விண்ணப்பத்தை போலீஸ் சூப்பிரண்டு சிவராமன் தவெக  நிர்வாகிகளிடம் வழங்கினார்.

இந்த கூட்டம் தொடர்பாக தவெக நிர்வாகிகள் கூறுகையில், " இந்த நிகழ்ச்சியில் வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 25 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். நிகழ்ச்சிக்கு வரும் அனைவருக்கும் குடிநீர், கழிப்பறை, மருத்துவம், வாகனங்கள் நிறுத்துவதற்கு வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறோம். சென்னையில் இருந்து சாலை மார்க்கமாக காரில் விஜய் வேலூருக்கு வருகை தருகிறார். அவரை வாகனத்தில் யாரும் பின்தொடர வேண்டாம், முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் வர வேண்டாம், பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும், பாதிப்புமுமின்றி நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்" என்றனர்.

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்