அதிமுக ஷாக்... விஜய் போட்டியிடும் தொகுதி இது தானா?
BY NEWS TODAY
19 Feb 2026
0
பகிர்

தவெக தலைவர் நடிகர் விஜய் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் தொகுதி கண்டறியப்பட்டுள்ளதாக கட்சியினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் சில மாதங்களில் நடைபெற உள்ளது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக ஆகிய நான்கு முனைப்போட்டி இந்த தேர்தலில் ஏற்பட்டுள்ளது. சட்டமன்றத் தேர்தலில் முதல் முறையாக களமிறங்கும் தவெக தலைவர் விஜய், பூத் கமிட்டி அமைக்கும் பணிகளில் தீவிரம் காட்டினார். தற்போது வேட்பாளர் தேர்வும் நடைபெற்று வருகிறது. 

இதில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் பெருவாரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக முன்னாள் பிரபலங்கள், தவெக மாவட்ட செயலாளர்கள் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். இதில் கட்சியின் தலைவரான நடிகர் விஜய் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் தொகுதியில் நடிகர் விஜய் போட்டியிடுவார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. விஜய் எந்த தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி பெற முடியும் என்று ரகசிய ஆய்வு நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் வேதாரண்யம் தொகுதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக கட்சி நிர்வாகிகள் கூறுகின்றனர். 

கடந்த முறை இந்த தொகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திமுக வேட்பாளரை குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். தற்போது அந்த தொகுதியை குறிவைத்து விஜய் களமிறங்கியுள்ளது அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேதாரண்யம் தொகுதி மீனவர்கள், விவசாயிகள் நிறைந்த பகுதி என்பதால் விஜய் இந்த தொகுதியை தேர்ந்தெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
 

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்