02
Mar 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
திமுகவில் அடிமைத்தனமாக நடத்தியதால் அதிமுகவில் இணைந்தேன்.
BY NEWS TODAY
19 Feb 2026
0
பகிர்

திமுகவில் அடிமைத்தனமாக நடத்தியதால் அதிமுகவில் இணைந்தேன்.  



 திமுக முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்ஸார் கோபி பேட்டி.



 மு க அழகிரியின் தீவிர ஆதரவாளரும், திமுக முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினருமான மதுரையைச் சேர்ந்த எஸ்ஸார் கோபி, அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் இணைந்தார். அவரோடு நூற்றுக்கணக்கான திமுகவினர் சேர்ந்தனர்.

 அதிமுகவில் இணைந்த பின் வெளியே வந்த எஸ்ஸார் கோபி கூறுகையில், திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது உயிரைக் கொடுத்து உழைத்தோம். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்ததும் எங்களை எல்லாம் கண்டுகொள்ளவில்லை. அது கூட பரவாயில்லை, ஆனால் அடிமைத்தனமாக நடத்துகின்றனர். பல்வேறு தேர்தலில் திமுகவின் வெற்றிக்காக கடுமையாக உழைத்தோம். ஆனால் இப்போது மரியாதை இல்லை. ஆகையால் அதிமுகவில் இணைந்து கொண்டேன். நான் இப்போதும் மு க அழகிரி ஆதரவாளர் தான் . நட்புக்கு உதாரணம் அவர். 

 எங்கள் வீட்டு திருமணத்திற்கு முதல்வர் மற்றும் துணை முதல்வர் பெயரை அச்சடித்து அழைத்தோம். ஆனால் வரவில்லை பெயரை போடாத அண்ணன் அழகிரி அவர்கள் வந்து பெருமைப்படுத்திவிட்டார். 

என்றார். 



----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்