02
Mar 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
திமுக, காங்கிரஸ் கூட்டணியில் மாற்றமா?- கனிமொழி எம்.பி பரபரப்பு பேட்டி
BY NEWS TODAY
20 Feb 2026
0
பகிர்

திமுக காங்கிரஸ் கூட்டணியில் மாறுதலும் வருமா என்ற கேள்விக்கு திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி பதிலளித்துள்ளார். 

தூத்துக்குடி விமான நிலையத்தில் அவர் இன்று (பிப்ரவரி 20) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “ இடைக்கால பட்ஜெட்டில் பட்ஜெட்டில் எதிர்கால திட்டங்கள் எதுவும் இல்லை என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். ஆனால் அதைத் தாண்டி அதை அவர் ஒழுங்காக படித்துப் பார்த்தால் அதில் பல முக்கியமான, எதிர்காலத்தில் இளைஞர்களுக்கு, விளையாட்டுத் துறைக்கு தேவையான விஷயங்கள் அதில் சொல்லப்பட்டுள்ளது. ஏதோ ஒன்று வெளிநடப்பு செய்ய வேண்டும் என்ற காரணத்திற்காக அவர் ஓர் அரசியல் நாடகத்தை அரங்கேற்றுவது சரியானது அல்ல.”என்று பதிலளித்தார். 

திமுக, காங்கிரஸ் கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக பாஜக தொடர்ந்து கூறிவருவது குறித்த கேள்விக்கு. “பாஜக அவர்களின் கூட்டணியை சரியாக வைத்துக் கொண்டாலே போதும். அவர்கள் ஏன் மற்ற கூட்டணிகளை பற்றி கவலைப்படுகிறார்கள் என தெரியவில்லை. திமுக காங்கிரஸ் கூட்டணி பல ஆண்டுகளாக நிலைத்திருக்கக்கூடிய கூட்டணி. அதனால், அதில் எந்தவித மாறுதலும் வருவதற்கு வாய்ப்பு இல்லை.” என்று தெரிவித்தார். 

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்த கேள்விக்கு, “மாநிலத்தையே கொண்டு போய் அடகு வைத்தவர் தான் எதிர் கட்சி தலைவர். திமுகவின் அடிப்படை கொள்கையே மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பது தான். அது அவருக்கு தெரியாமல் இருக்கலாம்.” என்று கனிமொழி பதிலளித்தார். 

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்