02
Mar 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
திமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த குழு அமைப்பு- துரைமுருகன் அறிவிப்பு
BY NEWS TODAY
21 Feb 2026
0
பகிர்

திமுக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக துரைமுருகன் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. அதற்குள் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக கூட்டணியில் தேமுதிக திடீரென சேர்ந்ததால் அக்கட்சியினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, 2 கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தேமுதிக. உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதிமுக. அணியில் பாஜக, அமமுக, பாமக, தமாகா. புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதனால் இந்த தேர்தலில் நான்கு முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிடுள்ள அறிக்கையில், டி.ஆர். பாலு தலைமையிலான குழுவில் கே.என்.நேரு, திருச்சி சிவா, ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் பெற்றுள்ளனர். கூட்டணி கட்சிகளுடன் நாளை முதல் தொகுதி பேச்சுவார்த்தை நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்