02
Mar 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
தமிழே நீ வாழ்ந்திடு... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
BY NEWS TODAY
21 Feb 2026
0
பகிர்


தமிழே நீ வாழ்ந்திடு என்று சர்வதேச தாய் மொழி தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

சர்வதேச தாய் மொழி தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளை முன்னிட்டு திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவரது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். 

அதில், "தமிழே நீ வாழ்ந்திடு. இன்று உலகத் தாய்மொழிகள் நாள். ஏராளமானோர் உயிர்கொடுத்துக் காத்த நம் உயிர்நிகர் தமிழ்மொழியை எத்தனை சிறப்புகள் சொல்லி அழைத்தாலும் 'தமிழே' என்று அழைத்திடும்போது கிடைத்திடும் இன்பம் மகத்தானது. தலைவர் கலைஞரின் இந்த வரிகளைப் பாடலாக்கிய அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். அவர்களுக்கு என் நன்றி. 

நம் தமிழைக் காத்து - அதை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் கொண்டு சேர்த்து, செழிப்போடு வாழவைக்க வேண்டியது உலகெங்கும் வாழும் அனைத்துத் தமிழர்களின் பொறுப்பு" என்று கூறப்பட்டுள்ளது. 

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்