02
Mar 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
சொந்த மாவட்டத்தில் களமிறங்கும் சீமான்?- திருச்சியில் இன்று அறிவிக்கிறார்!
BY NEWS TODAY
21 Feb 2026
0
பகிர்

தனது சொந்த மாவட்டமான சிவகங்கையில் உள்ள காரைக்குடியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

நாம் தமிழர் கட்சி ஒவ்வொரு தேர்தலிலும் தனித்தே களம் கண்டு வருகிறது. 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 1.07 சதவீத வாக்குகளைப் பெற்ற நாம் தமிழர் கட்சி, 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 3.9 சதவீத வாக்குகளைப் பெற்றது. இதன்பின் 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 6.58 சதவீத வாக்குகளையும், 2024-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 8.2 சதவீத வாக்குகளையும் பெற்றது. இதையடுத்து 2025 ஜனவரி 10-ம் தேதி நாம் தமிழர் கட்சிக்கு மாநில அந்தஸ்து கிடைத்தது. 

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில வாரங்களில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்தே களமிறங்க உள்ளது. இந்த நிலையில், நாம் தமிழர் கட்சி சார்பில் மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு இன்று (பிப்ரவரி 21) திருச்சியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் 117 ஆண் வேட்பாளர்கள் மற்றும் 117 பெண் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர். இதில் கட்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் அவரது சொந்த மாவட்டமான சிவகங்கையில் உள்ள காரைக்குடியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 234 வேட்பாளர்களின் பெயர் பட்டியலில் சீமானின் பெயர் உள்ளதா என்பதை அவர் இன்று அறிவிக்க உள்ளார். 

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்