02
Mar 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
சசிகலாவின் புதிய கட்சிக்கு தமிழக உழவர் உழைப்பாளர் கட்சி ஆதரவு.
BY NEWS TODAY
21 Feb 2026
0
பகிர்

அரசியல் களத்தில் அடுத்த அதிரடி.


சசிகலாவின் புதிய கட்சிக்கு தமிழக உழவர் உழைப்பாளர் கட்சி ஆதரவு. 


தமிழகத்தின் தென் மாவட்ட அரசியலில் அடுத்தடுத்த அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வரும் வேளையில் சசிகலா புதிய கட்சி தொடங்க உள்ளார். அதற்கான அனைத்து பணிகளும் முடிவுற்ற நிலையில் அங்கீகாரம் வரும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இதற்கிடையே தமிழக உழவர் உழைப்பாளர் கட்சி மாநிலத் தலைவர் வேல்முருகன் முதல் ஆளாக சசிகலாவை அவரது இல்லத்தில் நேற்று சந்தித்து தனது முதல் வாழ்த்தைப் பதிவு செய்துள்ளார். 

இந்த சந்திப்பின்போது சசிகலாவுக்கு பூங்கொத்து கொடுத்து தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளார். வேல்முருகன் பேசுகையில், தமிழக மக்களின் பேராதரவுடன் சின்னம்மாவுக்கு வரவிருக்கும் அரசியல் பயணத்தில் மிகப்பெரிய வெற்றி கிடைக்க நாங்கள் ஆதரவு கொடுப்போம் என்று தெரிவித்தார். 

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்