02
Mar 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
வேலூரில் விஜய் இன்று பரப்புரை- 4900 பேருக்கு மட்டுமே அனுமதி
BY NEWS TODAY
23 Feb 2026
0
பகிர்

வேலூரில் இன்று நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் தவெக தலைவர் நடிகர் விஜய் பங்கேற்கிறார். இதில் 4900 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சியினர் கூட்டணி பேச்சுவார்த்தை,, வேட்பாளர் தேர்வு என பிஸியாக உள்ளனர். இந்த நிலையில், முதல் முறையாக சட்டமன்றத் தேர்தலில் களமிறங்கும் தவெக தலைவர் விஜய், நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். சேலத்தைத் தொடர்ந்து வேலூர் மாவட்டம் கொல்லமங்கலம் பகுதியில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் இன்று (பிப்ரவரி 23) நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி முதல் நடைபெறவுள்ளது.

இதில் தவெக தலைவர் விஜய் பங்கேற்று பேசும் நிலையில்,க்யூஆர் குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 4900 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சேலம் நிகழ்ச்சியின் போது மயங்கி விழுந்து ஒருவர் உயிரிழந்த நிலையில், வேலூர் கூட்டத்தில், நிர்வாகிகளின் வசதிக்காக மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது பாதுகாப்புக் கருதி, கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்களுக்கு நுழைவு சீட்டு வழங்கவில்லை என்றும், அவர்கள் கண்டிப்பாக வர வேண்டாம் என தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கேட்டுக் கொண்டுள்ளார். 

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்