02
Mar 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற உறுதி- அண்ணாமலை வெளியிட்ட வீடியோ
BY NEWS TODAY
23 Feb 2026
0
பகிர்

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உறுதியை ஏற்று கந்த சஷ்டி கவசம் பாடி முருனைப் போற்றுவோம் என்று அண்ணாமலை கூறியுள்ளார். 

மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள முருகன் கோயிலில் கார்த்திகை தீபமேற்றும் போராட்டத்தின் அடுத்தக்கட்டமாக மார்ச் 2-ம் தேதி கிரிவலம் செல்ல பாஜக முடிவு செய்துள்ளது. சதுர்த்தியும், கிருத்திகையும் இணைந்து வரும் இன்று முருகப் பெருமானுக்கு 7 தீபங்கள் ஏற்றுமாறு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்திருந்திருந்தார். 

இந்த நிலையில், பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து வெளியிட்டுள்ளார். அதில்," சக்திவேல் ஏந்திய குமரனுக்கு உகந்த திதியான சஷ்டியும், கந்தனுக்கு உகந்த நட்சத்திரமான கார்த்திகையும் இணைந்துள்ள இன்றைய நாளில், திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றவேண்டும் என்ற உறுதியை ஏற்று "கந்த சஷ்டி கவசம்" பாடி முருகனை போற்றுவோம். அனைவரின் இல்லங்களிலும், உள்ளங்களிலும் கந்த சஷ்டி கவசம் பாடி, முருகப்பெருமானின் பேரருள் உலக மக்கள் அனைவருக்கும் கிடைத்திட மனதார பிரார்த்திப்போம்" என்று: கூறியுள்ளார்.

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்