02
Mar 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
திமுகவிடம் 5 தொகுதிகள் கேட்டுள்ளோம்: ஜவாஹிருல்லா பேட்டி
BY NEWS TODAY
23 Feb 2026
0
பகிர்

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட திமுகவிடம் 5 தொகுதிகளைக் கேட்டுள்ளதாக மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார். 

திமுக கூட்டணியில் உள்ள மனித நேய மக்கள் கட்சி கடந்த முறை மணப்பாறை, பாபநாசம் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. தற்போது 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை திமுக நேற்று தொடங்கியது. அப்போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்குடன் முதலில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. கடந்த முறை மூன்று தொகுதிகளில் போட்டியிட்டு அத்தனை தொகுதிகளிலும் தோல்வியடைந்த அந்த கட்சி, இந்த முறை தேர்தலில் போட்டியிட திமுகவிடம் 5 தொகுதிகளைக் கேட்டுள்ளது. 

இந்த நிலையில், இன்று (பிப்ரவரி 23) மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லாவுடன் திமுக தேர்தல் குழு பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஜவாஹிருல்லா செய்தியாளர்களிடம் கூறுகையில், " திமுக கூட்டணியில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட மனித நேய மக்கள் கட்சிக்கு 5 இடங்களைக் கேட்டுள்ளோம். இது முதற்கட்ட பேச்சுவார்த்தைதான், மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாகக் கூறியுள்ளனர். இந்த முறையும் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளோம். அதிக தொகுதிகளை கேட்டுள்ளோம், முதல்வருடன் கலந்து பேசி முடிவெடுப்பதாகக் கூறியுள்ளனர்" என்றார். 

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்