02
Mar 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
அனைத்து குடும்பத்திற்கும் ரூ.10,000 கருணைத் தொகை - இபிஎஸ் அதிமுக ஆட்சிக்கு வந்ததும்.
BY NEWS TODAY
24 Feb 2026
0
பகிர்

அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அனைத்து குடும்பத்திற்கும் ரூ.10,000 கருணைத் தொகை - இபிஎஸ்.

3ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

அதன் விபரம்....

கடந்த 5 ஆண்டுகளில் விலைவாசி உயர்ந்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்; மக்களின் குடும்பச் சுமையும் அதிகரித்துள்ளது. 

இதனால் மக்களின் சுமையை குறைக்கும் வகையில் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் கருணைத்தொகையாக ரூ.10,000 வழங்கப்படும்.


1) அ.தி.மு.க ஆட்சியமைந்ததும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் கருணைத் தொகையாக ரூ.10,000 வழங்கப்படும்.


2) பதிவு செய்து, வேலைக்காக காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.2,000 வழங்கப்படும்.


3) +2 வரை படித்து வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்களுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும்.


4) ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் தொகுப்புடன் சேர்த்து ரூ.1,000 வழங்கப்படும்.


5) மீன்பிடி தடை காலங்களில் வழங்கும் நிவாரணம் ரூ.8,000-இல் இருந்து ரூ.12,000-ஆக உயர்த்தப்படும்.


6) கைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் 300 யூனிட்டில் இருந்து 450 யூனிட்டாக அதிகரிக்கப்படும்.


07) விசைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் 1,000 யூனிட்டில் இருந்து 1,400 யூனிட்டாக உயர்த்தப்படும்.


08) நடை பாதை வியாபாரிகள் பெற்ற கூட்டுறவு வங்கிக் கடன் தள்ளுபடி செய்யப்படும்.


09) தமிழ்நாட்டின் வருவாயை பெருக்கி வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்.


----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்