19
Mar 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
கால்நடை உதவி மருத்துவர்கள் நாடு தழுவிய தற்செயல் விடுப்பு போராட்டம்
BY NEWS TODAY
13 Mar 2026
0
பகிர்

தமிழகம் முழுவதும் கால்நடை உதவி மருத்துவர்களின் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம்!!         

 தமிழ்நாடு அரசு கால்நடை மருத்துவக் கல்லூரிகளை தனியார் வசம் ஒப்படைப்பதை கண்டித்து தமிழகம் முழுவதிலும் கால்நடை உதவி மருத்துவர்கள் நாடு தழுவிய தற்செயல் விடுப்பு போராட்டத்தை நடத்தினார்கள். அதேபோல் கால்நடை மருத்துவ படிப்பு மாணவர்கள் கல்லூரிகளை புறக்கணித்து அறப்போராட்டம் நடத்த முன்வந்துள்ளனர். 

மதுரை மாவட்டத்தில் சுமார் 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட கால் நடை உதவி மருத்துவர்கள் தற்செயல்விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் பங்கு பெற்றனர். மேலும் இவர்களது கோரிக்கையான vetnet என்ற செயலியை திரும்பப் பெற வேண்டும் என்றும் vetnet செயலியினால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்படுவதால் இந்த செயலியை திரும்பப் பெற வேண்டும் என்பதும் இவர்களுடைய கோரிக்கையாக உள்ளது. மேலும் காலியாக உள்ள கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்களையும், கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடங்களையும் நிரப்ப வலியுறுத்தி இந்த ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டத்தை மேற்கொண்டனர்.


----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்