ஐஏஎஸ் அதிகாரிகளை  மாற்ற தேர்தல் ஆணையத்திடம் மனு
BY NEWS TODAY
16 Mar 2026
0
பகிர்

 ஐஏஎஸ் அதிகாரிகள்  மாற்றக் கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு


 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகள் இன்று (15.03.2026) அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுங்கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர்களாக செயல்படும் 4 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை உடனடியாக இடமாற்றம் செய்யக்கோரி இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கார்த்திகேயன் என்பவர் மனு இமெயில் மூலம் மனு அனுப்பி உள்ளார்.

மனுவில், 

​தேர்தல் நடத்தை விதிகள் (Model Code of Conduct) உடனடியாக அமலுக்கு வந்துள்ளதால், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.  

கடந்த 14.07.2025 அன்று ஆளும் திமுக அரசால் தமிழகத்தின் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளான

தீரஜ் குமார், IAS - கூடுதல் தலைமைச் செயலாளர் (உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத் துறை).

​திருமதி. பி. அமுதா, IAS - கூடுதல் தலைமைச் செயலாளர் (வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை).

​திரு. ககன்தீப் சிங் பேடி, IAS - கூடுதல் தலைமைச் செயலாளர் (ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை).

​டாக்டர். ஜெ. ராதாகிருஷ்ணன், IAS - தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் (தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்) ஆகியோர் அரசின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டனர்.

​அரசு பணியில் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் அரசியல் ரீதியான பணிகளில் ஈடுபடுவது தேர்தல் நடுநிலைமையைப் பாதிக்கும்.  

எனவே மேற்கண்ட நான்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளையும் தேர்தல் தொடர்பில்லாத மற்றும் முக்கியத்துவம் இல்லாத பிற துறைகளுக்கு உடனடியாக மாற்ற வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 


----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்