டெல்லி முடிவா? 4 ஐபிஎஸ் டிரான்ஸ்பர்
BY NEWS TODAY
17 Mar 2026
0
பகிர்


 இந்திய தேர்தல் ஆணையத்தால் 15ம் தேதி மாலை 4 மணிக்குதான் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. மாதிரி நடத்தை விதிகள் (MCC) அமலுக்கு வந்த மறுநாள் காலையிலேயே தமிழகத்தில் கரூர் விருதுநகர் மாவட்டம் உட்பட நான்கு மாவட்ட எஸ்பிக்கள் அதிரடியாக மாற்றப்பட்டனர். மாற்றப்பட்ட அதிகாரிகள் தேர்தல் தொடர்பான எந்தப் பணியிலும் ஈடுபடக்கூடாது என்றும், புதிய அதிகாரிகள் உடனடியாகப் பொறுப்பேற்று அது குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

 வழக்கமாக தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவிப்புக்கு பிறகு விசாரணை மேற்கொண்டோ அல்லது பிற அரசியல் கட்சிகள் சமூக ஆர்வலர்களின் புகாரியின் அடிப்படையிலும் வேண்டுகோளின் படியும் அதிகாரிகள் மாற்றங்கள் நடைபெறுவது வழக்கம்.


​டெல்லி எடுத்த முடிவு? பொதுவாக தேர்தல் ஆணையம் இதுபோன்ற அதிரடி மாற்றங்களைச் செய்வதற்கு முன், மத்திய உளவுத்துறை (IB) மற்றும் மாநில தேர்தல் அதிகாரிகளிடம் இருந்து பெறப்படும் ரகசிய அறிக்கைகளை ஆய்வு செய்யும். புகார்களுக்கு உள்ளானவர்கள் அல்லது ஒரே இடத்தில் நீண்ட காலம் பணியாற்றுபவர்கள் குறித்து முன்கூட்டியே பட்டியல் தயார் செய்யப்பட்டு, தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் நடுநிலையை உறுதி செய்ய இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

 ஆனால் இந்த முறை அவ்வாரு இல்லாமல் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வந்த 4 மணி நேரத்தில் நான்கு எஸ்பிக்கள் மாற்றபட்டது அனைத்து அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 அப்படியானால் அதிகாரிகள் மாற்றம் என்பது டெல்லியிலேயே முடிவு செய்யப்பட்டதை காட்டுகிறது. 

 அப்படியானால் தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே மத்திய உளவுத்துறை மற்றும் மாநில தேர்தல் அதிகாரிகள் மூலம் தகவல்களை திரட்டி உள்ளது தெரிய வருகிறது.

​ அதன்படி கரூர் மாவட்ட எஸ்.பி-யாக இருந்த ஜோஸ் தங்கையா, ஒரு சார்பாக செயல்படுவதாகக் கூறி அரசியல் கட்சிகள் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த மாற்றம் நிகழ்ந்ததாகக் கருதப்படுகிறது.

​ அது மட்டுமல்லாமல்

​ஒரு மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுபவர்கள்.

​சொந்த மாவட்டத்தில் பணியாற்றுபவர்கள்.

​அரசியல் சார்பு உடையவர்கள் எனப் புகார் எழும் அதிகாரிகளின் விரிவான பட்டியலை டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையம் ஏற்கனவே தயார் செய்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது. அதனால்தான் தேர்தல் அறிவிப்பு வந்த 4 மணி நேரத்திற்குள் இவ்வளவு விரைவாக நடவடிக்கை எடுக்க முடிந்தது.

​ இத்தகவல் அறிந்து தமிழகத்தில் ஆளுங்கட்சியான திமுக எனவே இன்ஸ்பெக்டர் முதல் டிஜிபி வரை பணிமாற்றம் செய்யும் பட்டியலை தயாரித்து மாற்றம் செய்தனர். 

 எனவே பிற கட்சிகள் புகார் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் ஆளுங்கட்சிக்கு ஆதரவான அதிகாரிகள் இன்னும் மாற்றப் படுவார்கள் என்று தெரிய வருகிறது. இதனால் 

தேர்தல் பணிகளில் அதிகாரிகள் ஆளுங்கட்சிக்கு சாதகமாக நடந்தாலோ, நடுநிலையாக நடக்காவிட்டாலோ தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்ற பயம் தற்போது அதிகாரிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. 

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்