தேர்தல் நடத்தை விதிகள்! அமலுக்கு வந்தது உடனடியாக
BY NEWS TODAY
15 Mar 2026
0
பகிர்

 உடனடியாக அமலுக்கு வந்த நடத்தை விதிகள்!



 தமிழக முற்பட ஐந்து மாநில சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். மே நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. மிகவும் குறுகிய நாட்களில் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால் நன்னடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

 இதன் மூலம் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்தும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படும்.

நடத்தை விதி அமலுக்கு வந்த பின்பு அரசு எந்த புதிய அறிவிப்பும் வெளியிட முடியாது.

அரசு சார்பில் ஏற்கனவே இருக்கும் பணிகள் தொடர்ந்து நடக்கலாம், புதிய பணிகளை தொடங்க முடியாது.

தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க அரசு அதிகாரிகள் கொண்ட பறக்கும் படைகள் களத்தில் இறங்கும்.

கட்சிகளின் நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட தேர்தல் அதிகாரியான ஆட்சியரிடம் அனுமதி பெறுவது அவசியம்.

அனுமதி பெறாமல் அரசியல் கட்சிகளின் கொடிகள், பேனர்களை வைக்கக்கூடாது - இந்திய தேர்தல் ஆணையம்.

பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் அழிக்கப்படும்.

அரசியல் கட்சிகள் அல்லது வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணம், பரிசு தரக்கூடாது.

மாநிலம் முழுவதும் உள்ள அரசியல் தலைவர்களின் சிலைகள் மறைப்பு கொண்டு மூடப்படும்.

சோதனைச் சாவடிகள் அமைத்து வாகனங்கள் தீவிர சோதனைக்கு உள்ளாக்கப்படும்.

உரிய ஆவணங்களின்றி அதிகளவிலான பணம், நகை உள்ளிட்டவற்றை கொண்டு செல்ல முடியாது - இந்திய தேர்தல் ஆணையம்.

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்