அமெரிக்க தீவிரவாத பாதுகாப்பு தலைவர் திடீர் ராஜினாமா
BY NEWS TODAY
18 Mar 2026
0
பகிர்

அமெரிக்க தீவிரவாத பாதுகாப்பு தலைவர் திடீர் ராஜினாமா

ஈரான் மீதான போர் தேவையற்றது என்று குறிப்பிட்டுள்ளார்.


அமெரிக்காவின் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையம் (National Counterterrorism Center) தலைவர் ஜோ கேன்ட் (Joe Kent) தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.

ஈரான் மீது அமெரிக்கா மேற்கொண்ட போர் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். இது ட்ரம்ப்க்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

ஜோ கேன்ட் தனது ராஜினாமா கடிதத்தில், “ஈரான் அமெரிக்காவுக்கு உடனடி அச்சுறுத்தல் அல்ல” என்றும், இந்தப் போர் “இஸ்ரேல் அழுத்தத்தின் காரணமாக தொடங்கப்பட்டது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஜோ கேன்ட் அமெரிக்க உழவு நிறுவனத்தின் முக்கிய அதிகாரியாக செயல்பட்டவர். அமெரிக்க பேரா மிலிட்டரி படையிலும் பணியாற்றியவர். தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையம் தலைவர் பொறுப்பிற்கு

 அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பால் நியமிக்கப்பட்டு அது செனட்டிலும் ஒப்புதல் பெறப்பட்டு தலைவர் பதவியை ஏற்று நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்