'அனுமதி' இந்திய எண்ணெய் கப்பல்களுக்கு ஹார்முஸ் கடல் நீர் வழியாக செல்ல
BY NEWS TODAY
12 Mar 2026
0
பகிர்

இந்தியக் கொடி ஏந்திய எண்ணெய் கப்பல்கள் ஹார்முஸ் கடல் நீர் வழியாக செல்ல ஈரான் அனுமதி வழங்கியுள்ளது.


இந்திய நாட்டின் ஆயுள் நிறுவனத்திற்கு சொந்தமான புஷ்பக, பரிமல் ஆகிய இரண்டு எண்ணெய் கப்பல்கள் ஈரான் அருகே உள்ள ஹார்முஸ் கடல் நீர் வழித்தடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே ஏற்பட்டுள்ள போர் காரணமாக கப்பல்கள் இந்தியா வர முடியாத நிலை ஏற்பட்டது.

 இந்நிலையில், ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சியுடன், நமது மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நடத்திய பேச்சுவார்த்தையில் இருநாடுகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

*இதையடுத்து, இந்தியாவின் Pushpak, Parimal கப்பல்கள் இந்திய தேசியக் கொடியேற்றி பாதுகாப்பாகச் செல்லலாம் எனவும் அதற்கு ஈரான் பாதுகாப்பு இருக்கும் என்றும் நாட்டு வலியுரை உத்தரவை அமைச்சர் கூறியுள்ளார்.

 இதையடுத்து க்ரூட் ஆயில் மற்றும் இயற்கை எரிவாயு விலை ஏற்றி வரும் இந்தியாவுக்கு சொந்தமான இரு கப்பல்களும் பாதுகாப்பாக கிளம்பி உள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கிறது.

 எனவே நமது நாட்டில் கேஸ் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு என்ற வீண் வதந்தி பரப்புகின்ற நிலையில் இனி அதற்கான பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என தெரிகிறது.

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்