வாரிசு அரசியல் ஸ்டாலின் குலத் தொழிலா.
BY NEWS TODAY
16 Mar 2026
0
பகிர்


 திமுகவில் கட்சிக்காக உழைத்த தொண்டர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். ஸ்டாலின் குடும்பம் மற்றும் அமைச்சர்களின் வாரிசுகள் மட்டுமே அதிகாரத்தில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் கேள்விகளுக்கு உள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், 

2026 சட்டமன்றத் தேர்தல் திமுகவின் "மன்னராட்சி" சிந்தனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக அமையும்.

திமுகவில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, அவருக்குப் பின் ஸ்டாலின், தற்போது உதயநிதி ஸ்டாலின் என வாரிசு அடிப்படையில் பதவிகள் வழங்கப்படுகின்றன.

​இப்போது உதயநிதியின் மகன் இன்பநிதியையும் அரசியலுக்கு கொண்டு வர முயற்சிகள் நடக்கிறது.

 அதுபோல் கனிமொழி, சபரீசன், தயாநிதி மாறன் போன்ற குடும்ப உறுப்பினர்களே கட்சியின் அதிகார மையங்களாகச் செயல்படுகின்றனர்.

​ஸ்டாலின் குடும்பம் மட்டுமின்றி, டி.ஆர். பாலு, பொன்முடி, நேரு, துரைமுருகன், ஐ. பெரியசாமி போன்ற முன்னாள் மற்றும் இந்நாள் அமைச்சர்களின் வாரிசுகளுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

​"அரசியல் என்பது இந்த குறிப்பிட்ட குடும்பங்களுக்கு மட்டும் குலத்தொழிலா?".

​கட்சிக்காக உழைத்த அடிமட்டத் தொண்டர்களுக்கு அதிகாரத்தில் இடமில்லை.

​தொண்டர்களுக்குத் திறமையும் ஆற்றலும் இருந்தும், அவர்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுகின்றனர். இதுவா திராவிட சித்தாந்தம் கூறும் "அதிகாரப் பரவல்"? 

​2026 தேர்தல் முடிவு​ திமுகவின் வாரிசு அரசியலுக்கு மக்கள் இந்தத் தேர்தலில் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

​தமிழகத்தில் ஜனநாயகத்தை நிலைநாட்டவும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான மக்கள் ஆட்சியை ஏற்படுத்தவும் மக்கள் தயாராகிவிட்டனர் என்று ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.


----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்