19
Mar 2026
HOT NEWS
இன்று செய்திகள் இல்லை
பெண் வன்கொடுமைக்கு எதிராக மாணவிகள் மனிதசங்கிலி
BY NEWS TODAY
15 Mar 2026
0
பகிர்

பெண் வன்கொடுமைக்கு எதிராக கல்லூரி மாணவிகள் மனிதசங்கிலி


மதுரை காந்தி என்.எம்.ஆர். சுப்பராமன் மகளிர் கல்லூரியில், மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. நடிகரும் சமூக ஆர்வலரும், வி.வி. என்டர்டெய்ண்மெண்ட் நிறுவனத்தின் நிறுவனர் விஜய் விஷ்வா, நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை தலைவர் ஸ்டார் குருசாமி தலைமை தாங்கினர் . இந்த விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு, மனித சங்கிலி அமைத்து பெண்கள் மீதான வன்கொடுமைகளுக்கு எதிராகவும், போதை பழக்கத்திற்கு எதிராகவும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். வாசன் கண் மருத்துவமனையின் தலைமை இயக்க அதிகாரி கமல்பாபு மற்றும் மதுரை கிரடாய் அமைப்பின் தலைவர் முத்துவிஜயன் ஓய்வு காப்பற்ற காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பல்வேறு துறைகளில் சாதித்த பெண்களுக்கு விருதுகளை வழங்கினர். இதனை தொடர்ந்து மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை, நடிகரும் சமூக ஆர்வலரும், வி.வி. என்டர்டெய்ண்மெண்ட் நிறுவனத்தின் நிறுவனர் விஜய் விஷ்வா மற்றும் அந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் செய்திருந்தனர். இந்த விழாவில், விருதுகளை பெற்று கொள்வதற்காக, வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமானவர்கள் வந்தனர். இதுபோல பிரம்மகுமாரிகள் அமைப்பினரும் கலந்து சிறப்பித்தனர். மேலும், தூய்மை நகரம் மதுரை என்ற தலைப்பில் கட்டுரைபோட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்