பெங்களூரு வாசன் கண் மருத்துவமனையில் சர்வதேச மகளிர் தின விழா
BY NEWS TODAY
15 Mar 2026
0
பகிர்

 வாசன் கண் மருத்துவமனையில் சர்வதேச மகளிர் தின விழா 


சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பெங்களூரு ஜெய்நகரில் உள்ள வசன் ஐ கேர் (Vasan Eye Care) மருத்துவமனையில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

​இந்த விழாவில் ஜெயநகர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ-வும், கர்நாடக மாநில மகளிர் காங்கிரஸ் தலைவருமான திருமதி சௌமியா ரெட்டி தலைமை விருந்தினராக கலந்துகொண்டார். இவ்விழாவில்

​பெண்களின் கண்சுயாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்களுக்கு குறைந்த செலவில் தரமான சிகிச்சை அளிக்கவும் “கோல்ட் பிரிவிலேஜ் கார்டு” எனும் புதிய சிறப்புச் சுகாதார அட்டையை வசன் ஐ கேர் மருத்துவமனை அறிமுகப்படுத்தியது.

 விழாவில் பெங்களூரு நகர காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் ஸ்டாலின் ஆபிரகாம், டாக்டர் அம்பேத்கர் மகளிர் சங்க தலைவர் மற்றும் உறுப்பினர்கள், ஏராளமான ஆஷா (ASHA) பணியாளர்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

​டாக்டர் மதுரா (கண்புரை அறுவை சிகிச்சை நிபுணர்): பெண்களிடையே கண்புரை குறித்த விழிப்புணர்வு மற்றும் ஜய்நகர் கிளையில் உள்ள நவீன மருத்துவ வசதிகள் குறித்து உரையாற்றினார்.

​டாக்டர் ஆதர்ஷ் (விழித்திரை அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் சி.எம்.ஓ): புதிய ஹெல்த் கார்டின் நன்மைகள் குறித்து விளக்கினார்.

 மருத்துவமனை ஊழியர்களான செல்வி பூர்ணிமா, நாகேந்திரா, அனூப் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

​நிகழ்ச்சியின் நோக்கம்​பெண்கள் தங்கள் கண் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சி அமைந்தது. விழாவின் இறுதியில் நடைபெற்ற கலந்துரையாடல் அமர்வில், பெண்கள் தங்கள் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெற்றனர்.


----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்