ஓபிஎஸ் துரோக வரலாறு அம்பலமாகும்
BY NEWS TODAY
17 Mar 2026
0
பகிர்


​மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார், ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்து அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி மீது சுமத்தி வரும் அவதூறுகளுக்குக் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.

​ஓபிஎஸ் தனது அதிகாரப் பசிக்காகவும், பதவி சுகத்திற்காகவும் முதல்வர் ஸ்டாலினைப் புகழ்ந்து பாடட்டும், இதற்காக அதிமுகவின் வரலாற்றைத் திரித்து 'கோயபல்ஸ்' பாணியில் பொய் பிரச்சாரம் செய்வது கண்டிக்கத்தக்கது .

​அதிமுகவை அழிக்க நினைக்கும் ஓபிஎஸ், எடப்பாடியாரைப் பற்றிப் பேச எந்தத் தகுதியும் இல்லை.

​2021 சட்டமன்றத் தேர்தலில் ஓபிஎஸ் தனது சொந்த மாவட்டமான தேனியில் எத்தனை தொகுதிகளை வெற்றிபெறச் செய்தார்? என்று கேள்வி எழுப்பிய உதயகுமார், அந்தத் தோல்வி விவரத்தைக் கூறினால் அவரது "லட்சணமும், துரோகமும்" மக்களுக்குத் தெரியும் என்றார்.

​ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக ஆட்சி தொடர எடப்பாடியார் முயற்சித்தபோது, அதற்கு எதிராக சட்டமன்றத்தில் வாக்களித்தவர் ஓபிஎஸ்.


​அதிமுக என்ற ஆலமரத்தின் வளர்ச்சிக்கு ஒரு செம்புத் தண்ணீரைக் கூட ஊற்றாத ஓபிஎஸ், இப்போது ஊர் ஊராகச் சென்று "ஊளையிடுவதை" நிறுத்திக்கொள்ள வேண்டும்.

​உண்மையான அதிமுக தொண்டர்களின் கோபத்திற்கு ஓபிஎஸ் ஆளாக நேரிடும் என்றும், அவதூறு பேசுவதை நிறுத்தவில்லை என்றால் கடுமையான எதிர்வினைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் எச்சரித்தார்.

​ஸ்டாலினை 'இந்திரன், சந்திரன்' என ஓபிஎஸ் புகழ்ந்து பாடும் போலி நாடகத்தை மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள் என்று ஆர்.பி. உதயகுமார் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்