விஜய் வாய் திறக்காதது ஏன்? திருப்பரங்குன்றம் விவகாரத்தில்..
BY NEWS TODAY
19 Mar 2026
0
பகிர்

 திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விஜய் வாய் திறக்காதது ஏன்?" 

-தமீமுன் அன்சாரி கேள்வி*

சென்னையில் நடைபெற்ற இஃப்தார் நோன்பில் தவெக தலைவர் விஜய் பங்கேற்றார்.

அப்போது அவர் பேசுகையில், பாஜக கூட்டணியில் சேர மிரட்டியதாகவும், தான் மதச் சார்பில்லாமல் இருக்க விரும்புவதாக பேசினார். சிறுபான்மையினர் ஓட்டை குறி வைத்து அவ்வாறு பேசியதாக கருதப்பட்டது.

இந்நிலையில் மனித நேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி கேள்வி எழுப்பி உள்ளதாவது, 

 இப்தார் நோன்பில் பங்கேற்ற விஜய் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் வாய் திறக்காதது ஏன்? பண்டிகை கொண்டாடிய கிறிஸ்துவர்கள் மீதான தாக்குதல் குறித்தும் விஜய் அப்போது பேசவில்லை. 

 இதுதான் மதச்சார்பின்மையா என்று கேள்வி எழுப்பி உள்ளார். இதே கேள்வியை திமுக உட்பட பல அமைப்புகளிடம் கேட்டால் நல்லது என்று விஜய் கட்சியினர் கேள்வி எழுப்பி உள்ளனர்.



----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்