அதிமுக கூட்டணியில் யார் யாருக்கு எத்தனை சீட்?
BY NEWS TODAY
19 Mar 2026
0
பகிர்

அதிமுக கூட்டணியில் யார் யாருக்கு எத்தனை சீட்?

 விரைவில் அறிவிப்பு

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

அதன்படி பாஜகவுக்கு -27, பாமகவுக்கு -17, டிடிவி தினகரனின் அமமுகக்கு- 9, தமாகாவுக்கு- 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

மொத்தம் 234 தொகுதிகளில் அதிமுக 170 இடங்களில் நேரடியாக போட்டியிட திட்டமிட்டுள்ளதாகவும், மீதமுள்ள 64 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு பகிரப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்த 64 தொகுதிகளில் பாஜக, பாமக, அமமுக ஆகியவற்றைத் தவிர்த்து மீதமுள்ள தொகுதிகள் புதிய நீதிக் கட்சி, ஐஜேகே, புரட்சி பாரதம், தென்னிந்திய ஃபார்வர்டு பிளாக் மற்றும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகளுக்கு வழங்குவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.

மேலும், சில சிறிய கட்சிகள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனால் தொகுதிப் பங்கீடு தொடர்பான இறுதி முடிவு தாமதமாகியுள்ளது.

 அதன் பிறகு எந்தெந்த தொகுதி யார் யாருக்கு என்பதும் முடிவு செய்யப்பட இருக்கிறது. 

தொகுதிப் பங்கீடு தொடர்பான அறிவிப்பு இன்னும் ஓரிரு தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்