3000 ஆண்டு வன்னி மரம் சாய்ந்தது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்
BY NEWS TODAY
20 Mar 2026
0
பகிர்

3000 ஆண்டு பழமையான வன்னி மரம் சாய்ந்தது.

இந்து மக்கள் கட்சி கண்டனம்.


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 3000 ஆண்டுகள் பழமையான வன்னி மரம் மற்றும் அதன் அடியில் உள்ள வன்னி மரத்தடி விநாயகர் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இது கோவிலின் தல விருட்சங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இத்தலம் திருவிளையாடல் புராணத்துடன் தொடர்புடையது.மேலும் வன்னி மரத்தின் கீழ் இருக்கும் வன்னிமர விநாயகரை வழிபட்டால் நன்மைகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

மேலும் வன்னி மரம் மிகவும் வசீகரமான மரம். இதனுடைய இலைகள் முத‌ல் அனைத்தும் சிறப்பு வாய்ந்தது. அப்படி வரலாற்று சிறப்புமிக்க வன்னிமரம் அருகே திருக்கோவில் நிர்வாகம் சார்பில் சமையல் கூடம் வைத்து புளியோதரை, பொங்கல், முருக்கு போன்ற பிரசாத பொருட்கள் தயாரித்து வருகின்றனர்.

அப்பொழுது சிலிண்டர் அடுப்பின் புகையின் காரணமாக வன்னிமர இலையில் பட்டு இலைகள் கருகி போவதை சுட்டிகாட்டி வன்னிமரத்தின் வீரியத்தன்மை குறைந்து வருகிறது என்றும்,வருங்காலத்தில் வன்னிமரத்திற்கு மிகப்பெரிய ஆபத்தை உண்டாக்க போகிறது என்றும், உடனடியாக வன்னிமரத்தடியில் பிரசாதம் செய்யும் இடத்தை மாற்றவேண்டும் என்று இரண்டு வருடங்களுக்கு முன்பாக இந்துமக்கள்கட்சி சார்பில் அதன் மாவட்ட தலைவர் சோலை கண்ணன் புகார் அளித்தார்.

 இது குறித்து சோலை கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

 திருக்கோவில் நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருந்தது. 

இந்நிலையில் அதிகாலை பெய்த மழையால் வன்னி மரம் முறிந்து சாய்ந்து விழுந்துள்ளதை கேட்டு பக்தர்கள் அனைவரும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளனர்.

சமையல் கூடத்தை வேறு இடத்திற்கு மாற்றி இருந்தால் இன்று இந்த வன்னிமரம் முழுமையாக பாதுகாக்கப் பட்டிருக்கும்.


ஆகவே வரலாற்று சிறப்புமிக்க வன்னிமரத்தை அலட்சிய போக்கால் பாதுகாக்க தவறிய திருக்கோவில் நிர்வாகத்தை இந்துமக்கள்கட்சி சார்பில் வன்மையான கண்டனத்தை பதிவு செய்தும்,இனிமேலாவது இருக்கின்ற வன்னிமரத்தை பாதுகாக்கின்ற வகையில் அருகில் இருக்கும் சமையல் கூடத்தை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருக்கோவில் நிர்வாகத்திற்கு பக்தர்கள் சார்பில் இந்துமக்கள்கட்சி இக்கோரிக்கை வைக்கிறது 

 என்று தெரிவித்துள்ளார்.

----------------------
ஆசிரியர் NEWS TODAY
எங்கள் சமீபத்திய X பதிவுகள்
Follow @NewsTodayTamill X posts by NewsTodayTamill
எங்களைப் பின்தொடரவும்
News Logo

எழுதியவர் NEWS TODAY

25 ஆண்டுகளுக்கு மேலான பத்திரிகை துறையில் பணியாற்றும் நான், முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலர் உடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

தொடரவும் :

தொடர்புடைய செய்திகள்